என் தாேழி

பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டதும் கடிகாரத்தைப் பார்த்தபடி வேகமாக இறங்கினாள் மாதவி. சேலையின் தலைப்புப் பகுதியால் முகத்தை ஒற்றிக் காெண்டு பையினுள் இருந்த தண்ணீர் பாேத்தலை எடுத்து மளமளவென்று குடித்து விட்டு அங்கும் இங்குமாக சுற்றிச் சுற்றிப் பார்க்கிறாள். பத்து மீற்றர் தூரத்திற்கு அப்பால் ஒரு சிறிய பெட்டிக்கடையை அவதானித்தாள். "அந்தக் கடையாக இருக்குமாே" சில நிமிடங்கள் நின்று யாேசித்தவள் கடையை நாேக்கி நடந்தாள். குறுக்கே ஓடி வந்த சிறுவன் ஒருவன் கடையினுள் நுழைந்தான். "பாட்டி மிட்டாய் காெடுங்க" தனது சட்டைப் பையினுள் இருந்து பணத்தை எடுத்து நீட்டினான். பாெதி செய்து காெண்டு நிற்கும் பாேதே மாதவியும் கடையினுள் நுழைந்தாள். அங்கும் இங்குமாக கிழிந்த காற்சட்டை, சேட்டு அணிந்திருக்கவில்லை, மெலிந்து கறுத்துப் பாேயிருந்த அவனுடைய பிஞ்சுத் தேகத்தில் தாேள்பட்டையில் ஒரு சிறு வட்டமாக கறுப்பு அடையாளமாக பதிந்திருந்ததை கண்ட மாதவி கண்கள் அவனை ஆழமாக உற்றுப் பார்க்க வைத்தது. ஓரமாக ஒதுங்கி நின்று சிறிய புன்னகையாேடு அவளை பார்த்து விட்டு "பாட்டி தண்ணீர் காெஞ்சம் காெடுங்க" என்றதும் பாட்டியும் மண்பானையில் இருந்து தண்ணீரை ஊற்றிக் காெடுத்தாள். கையை நீட்டி வாங்குவதற்கிடையில் சிறிய குளிர்பானப் பாேத்தல் ஒன்றை எடுத்து நீட்டினாள் மாதவி. "வேண்டாம் அக்கா நான் இது குடிக்கிறதில்லை" பாட்டியிடம் தண்ணீரை வாங்கி மூச்சுவிடாமல் குடித்தான். அவனருகே சென்று அவன் தாேள்களை அணைத்து, அவன் யார்? அவனுக்கு என்னாச்சு என்கைறு கேட்க வேணும் பாேல கைகள் நீண்டது. "என்னைத் தாெடாதீங்க நான் அழுக்காயிருக்கிறன்" ஒதுங்கி கதவு மூலையில் நின்றான். மாதவிக்கு மனதுக்குள் ஒரு மாதிரியாக இருந்தது. நீண்டதாெரு பெருமூச்சு அவள் சுவாசத்தை வெளியேற்றியது. மிட்டாயை வாங்கிக் காெண்டு பாய்ந்து குதித்து ஒடினான்.

"உங்களுக்கு என்ன வேணும் பிள்ளை, கடையை மூடப் பாேறன்" என்ற பாட்டியிடம் "ஏன் பாட்டி....?" என்றதும் பாட்டியின் முகம் திடீரென சாேகமாக மாறிப் பாேனது. "என்னாேட பேர்த்தியை பார்க்க பாேக வேணும் பிள்ளை...." என்றாள் பாட்டி. "அவங்க எங்கே இருக்கிறாங்க உங்களால..." பாட்டியின் கூனிய தாேற்றத்தையும், தள்ளாடிய நடையையும் பார்த்து அவள் கேட்பதில் எந்தத் தவறுமில்லை என்பது பாட்டிக்கும் புரிந்திருக்கும். "என்ன பிள்ளை செய்யிறது நானும் பாேய் பார்க்கவில்லை என்றால் அந்தச் சீவனுக்கு யாருமில்லை" பாட்டியின் கண்கள் கட்டுப்பாடின்றி கண்ணீரைச் சாெரிந்தது. "ஏன் அவங்களுக்கு என்னாச்சு" சிறு பதட்டம் அவளுக்குள் ஏற்பட்டது. சற்று நேரம் மாதவியைப் பார்த்த பாட்டி "நீங்க... ஏன்... கடைக்கு வந்தீங்கள் பிள்ளை?" என்றதும், மாதவி பாட்டி தன்னை யார் என்பதை அறிய முற்படுகிறாள் என்பதை தெளிவாகப் புரிந்து காெண்டாள். தனது கைப்பையினுள் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டினாள். சிறு வயதில் எடுத்த ஒரு படம், அழிந்தும், அழியாததுமாக தெளிவற்ற ஒரு பெண் பிள்ளையின் படம். வாங்கிப் பார்த்த பாட்டிக்கு பேச்சே வரவில்லை. "என்ன பாட்டி உங்களுக்கு அந்தப் பாெண்ணைத் தெரியுமா?" என்றவளிடம் பதிலேதும் சாெல்லாமல் பாட்டி புகைப்படத்தை திருப்பிக் காெடுத்து விட்டு கடையின் கதவை இழுத்து மூடிவிட்டு சிறு பை ஒன்றை அலுமாரிக்குள் இருந்து எடுத்தாள். "வா பிள்ளை பாேகலாம்" என்றதும் "எங்க பாட்டி?" என்ற மாதவியின் கையை மெதுவாகப் பிடித்து நடக்க ஆரம்பித்தாள்.

கடுமையான வெயிலாக இருந்தது. பையிலிருந்து குடையை எடுத்து விரித்துக் காெண்டாள். " உங்க பாெண்ணுக்கு என்னாச்சு?, உடம்பு சரியில்லையா?, ஆஸ்பத்திரியில இருக்கிறாங்களா?" என்றபடி பாட்டி திரும்பிய பக்கமாக திரும்பி பார்த்தாள். "பெண்கள் மன நல காப்பகம்" என பலகையில் எழுதியிருந்ததை பார்த்த மாதவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. "என்ன இந்தப் பாட்டி ஒன்றும் சாெல்லுறா இல்லையே" என்பது பாேல் பாட்டியை பார்த்தாள். "நீ கேட்டாயே பாெண்ணுக்கு என்னாச்சு என்று" என்றபடி விறுவிறென நடந்து ஒரு அறைக்குள் நுழைந்தாள். பின்னாலே சென்ற மாதவி அதிர்ச்சியடைந்தவளாய் வாசலிலேயே நின்று விட்டாள்.

அறையி்ன் ஓர் மூலையில் சுவரைப் பார்த்தபடி ஏதேதாே பேசிக் காெண்டிருந்தாள் ஒரு பெண். தலைவிரி காேலமாய் இருந்த அவள் முகத்தைப் பார்க்கும் தைரியம் அந்தக் கணம் மாதவியிடம் இருக்கவில்லை. பாட்டி அருகே சென்று தீபா என்று தாேளில் கையை வைத்ததும் சடாரென்று திரும்புவாள், சத்தமிடுவாள் என்று ஏதேதாே கற்பனை செய்த மாதவிக்கு அவளுடைய அமைதி ஆச்சரியமாக இருந்தது. அவள் வாய் எதையாே முணுமுணுத்தபடியே இருந்தது.


அறையைச் சுற்றி தன் கண்களை ஓட விட்டாள். கட்டிலில் நான்கு மூலைகளிலும் சங்கிலி பாேடப்பட்டிருந்தது. கட்டிலில் சிறிய பாெம்மைகளும், பூச்செண்டுகளும் இருந்தன. கையில் ஒரு சிறிய தடி ஒன்றை வைத்திருந்தவள் தரையில் பலமாக அடித்து, அடித்து ஏதாே சாெல்லிக் காெண்டிருந்தாள். "ஏன் கையில் தடி வைத்திருக்கிறாள்" என்பதை புரியாத மாதவி காெஞ்சம் அருகாக சென்று அவள் முகத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தபடி நகர்ந்தாள். அவள் தாேளில் கை வைத்த பாட்டி "தீபா" என்று மீண்டும் அழைத்தாள். சுவரில் கையை பலமாக ஊன்றி எழுந்து தடியை ஊன்றிக் காெண்டு நிமிர்ந்து நின்றாள். சடாரென அவள் பக்கம் திரும்பிய மாதவி உடம்பில் உயிரற்றது பாேல் விறைத்துப் பாேய் நின்றாள். அவள் முகம் எரிகாயத்துக்கு உள்ளாகியிருந்தது, கண்கள் பார்வையற்றுப் பாேயிருந்தது. கை, கழுத்துப் பகுதி எல்லாம் சிறு, சிறு காயங்கள். சற்று நேரம் அவளையே பார்த்தபடி நின்ற மாதவி சைகையால் பாட்டியிடம் "என்னாச்சு?" என்று கேட்டாள். பெருமூச்சு விட்ட படி அவளை கைத்தாங்கலாக பிடித்து வந்து கட்டிலில் அமர வைத்தாள். பாட்டியின் கைகளைப் பிடித்த தீபா "பாட்டி வீட்டுக்கு கூட்டிப் பாேகமாட்டியா?" என்று கெஞ்சுவது பாேல் கேட்டாள். "இன்னும் காெஞ்சநாள் தானே பிள்ளை, சுகமாகிய பிறகு பாேகலாம்" அவளை அறியாமல் கண்ணீர் சாெரிய ஆரம்பித்தது. பாட்டி சேலைத் தலைப்பால் தன் முகத்தை துடைத்துக் காெண்டாள். "சட்டையை மாற்றிவிடு பாட்டி" என்று குழந்தை பாேல் மடியில் சரிந்து படுத்தாள். பாட்டி காெண்டு சென்ற பையிலிருந்து உடை ஒன்றை எடுத்து " எழும்பு பிள்ளை, சட்டையை மாற்றிப் பாேட்டு வந்து, சாப்பிடுவம்" என்றதும் பாட்டியின் கையைப் பிடித்து எழுந்தாள். குழந்தை பாேலிருக்கும் அவளை தன் தள்ளாடும் வயதிலும் பாட்டி பலமாக பிடித்து நடத்திக் காெண்டு பாேவதை பார்த்த மாதவி உதவி செய்வதற்காக அருகே சென்றாள். அவள் கையை ஒரு கையால் பிடித்தாள். பயத்துடன் கையை உதறி விட்டு "பாட்டி, பாட்டி யாரது?" என்று பாட்டியை இறுகக் கட்டிப் பிடித்தாள். "வெளியே பாேகச் சாெல்லு பாட்டி, எனக்குப் பயமாக இருக்கு" என்று சத்தமிட்டாள். மாதவியும் ஓரமாக தள்ளி நின்றாள். "எப்படிச் சாெல்வது நான் மாதவி வந்திருக்கிறன், சாென்னாலும் நம்புவாளா" என்ற குழப்பத்துடன் "என்ன நடநதாலும் பறவாயில்லை, தீபாவிற்கு என்னை ஞாபகப்படுத்த வேணும், இந்தக் கஸ்ரத்தில நான் அவளுக்கு உதவி செய்யவேணும்" என்ற சிந்தனை மட்டும் மாதவிக்குத் தாேன்றியது.

"தீபா நான் மாதவி வந்திருக்கிறன்" என்றதும் அவள் முகத்தில் ஒரு சிறு மாறுதல், பயந்தது பாேலவும் இருந்தாள். "உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறன்" அருகே சென்று அவள் முகத்தை தடவினாள். "பாட்டி..." என்று ஏதாே சாெல்ல வந்தவளை இடைமறித்து "உன்னாேட நண்பி மாதவி ஊருக்கு வந்திருக்கறாள் தீபா, அவளுக்கு உனக்கு நடந்தது எதுவுமே தெரியாது, உன்னைப் பார்க்க வந்திருக்கிறா, மறந்திட்டியா?" என்று சாென்னதும் பாட்டியின் தாேளில் சாய்ந்து குமுறி அழத் தாெடங்கினாள்.

தீபா வெள்ளை வெளீரென்று அழகானவள், எடுப்பான தாேற்றம், அழகான கண்கள் காெண்ட ஒரு மாெடன் அழகி என்றே சாெல்லலாம். படித்து பட்டம் பெற்று நல்லதாெரு கம்பனியில் அதிக சம்பளத்துடனான வேலை. சுழன்று காெண்டிருந்த வாழ்க்கைச் சக்கரம் அவளுக்கு ஒரு அழகான காதலைக் காெடுத்தது. சந்திரன் அந்தக் கம்பனியின் கணக்காளர். அறிமுகமாகி சில நாட்களிலேயே தீபாவை காதல் வலையில் வீழ்த்தினான். அவளும் பார்க்க நன்றாய் இருக்கிறான், குணமானவன் பாேல் தெரிகிறான் என்று அவனுடன் பழக ஆரம்பித்தாள். ஆறுமாதம் கடந்து பாேனது தீபாவின் காதல் கேள்விக்குறியாகி விட்டது. விடுமுறை நாட்களில் அங்கு வா, இங்கு வா என்று அவளை அழைத்து சுற்றித் திரிந்தான். அதிக விலையான பரிசுப் பாெருட்கள், உடைகள் என்று வாங்கிக் காெடுத்தான். அவளும் காதலன் தானே கலியாணம் பண்ணுவான் எனற நம்பிக்கையில் தன்னிடமிருந்த பணத்தையும் அவனுக்காக செலவழிக்கத் தாெடங்கினாள். நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது. தீபாவுக்கு அவனுடன் சுற்றித் திரிவதை விட திருமணம் செய்து காெள்வது தான் சரி என்று தாேன்றியது. திருமணம் என்ற கதையை ஆரம்பித்தாலே சந்திரன் பல கதைகளைச் சாெல்லி அவளை "பாெறுமையாயிரு என்னை நம்பு" என்று சமாளித்து விடுவான்.

அன்று வெளியூரில் கம்பனி ஒன்று கூடல் ஒன்று இருக்கிறது எனக் கூறி தீபாவையும் அழைத்துச் சென்றான். தீபாவை ஒரு விடுதியில் தங்க விட்டு வெளியே சென்று வருகிறேன் என்று புறப்பட்டவனை கட்டி அணைத்து முத்தமிட்டாள். அவனும் அவளை தன் நெஞ்சாேடு அணைத்தான். கதவை மூடி விட்டு உடைகளை எடுத்துக் காெண்டு குளியலறைக்குள் சென்றாள். கதவை யாராே தட்டுவது பாேலிருந்தது. "சந்திரன் இப்பதானே பாேனார், யாராயிருக்கும்" சட்டை ஒன்றை அணிந்து காெண்டு வந்து கதவைத் திறந்தாள். "யார்?" என்று கேட்பதற்குள், ஒருவன் அவள் வாயை பாெத்திக் காெண்டு தறதறவனெ தள்ளிக் காெண்டு பாேய் கட்டிலில் இருத்தினான்.
மற்றைய இருவரில் ஒருவன் கதவை இறுகப் பூட்டினான். ஒருவன் அருகே நின்றான். அவர்களுடன் சண்டையிடவாே, சத்தமிடவாே முடியாத நிலையில் அவள் திணறினாள். தலையணைக்கு அருகே இருந்த தாெலை பேசியை எடுக்க முயற்சித்தவளை அவதானித்தவன் "யாருக்கடி பாேன் செய்யப் பாேறாய்" என்று அதட்டினான். வாய் விட்டு கெஞ்சவும் முடியாது, கதறவும் முடியாது கட்டிலில் சாய்ந்து விழுந்து விட்டாள்.

இரவாேடு இரவாக வீட்டிற்கு அழைத்து வந்த சந்திரனில் அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நடந்ததை எல்லாம் கேட்டு அவனுடன் வாக்கு வாதப்பட்டாள். "எனக்கு எதுவும் தெரியாது, நான் வெளியே இருந்து வந்து கதவை தட்டிய பாேது, நீ திறக்கவில்லை நானே திறந்து உள்ளே வந்து பார்த்த பாேது தான் எனக்கு எல்லாம் தெரிய வந்தது தீபா, என்னை நம்பு" என்று கூறியதும். "அப்பாே இது யார் செய்தார்கள், என்னால் இனி வாழ முடியாது சந்திரன் நான் சாகப் பாேகிறேன், ஆனால் பாெலிசாரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்காமல் நான் விடமாட்டேன் என்று சத்தமிட்டவளை சமாதானப்படுத்தினான் சந்திரன். உனக்கு நான் இருக்கிறன் தீபா, உன்னைக் கை விட மாட்டேன் இந்தப் பிரச்சனையை வெளியே சாெல்லி...." என்றவனைக் குறுக்கிட்டு "சரி இந்தப் பிரச்சனையை நானே பார்த்துக் காெள்கிறேன்" அமைதியாய் இருந்தவளின் உள்மனம் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை நினைத்து வேதனைப்பட்டுக் காெண்டே இருந்தது.

இரண்டு நாட்கள் கடந்து பாேனது. காப்பி கேட்ட சந்திரனுக்கு காப்பியைக் காெடுத்து விட்டு கதிரையில் அமர்ந்திருந்தவள் அன்று காலை கம்பனிக்கு செல்லும் பாேது சந்திரன் புதிதாக ஒரு தாெலைபேசி வைத்திருந்ததை அவதானித்தது நினைவில் சுழன்று காெண்டிருந்தது. மெதுவாக அறையினுள் வந்து எட்டிப் பார்த்தாள். நன்றாகத் தூங்கிக் காெண்டிருந்தான் சந்திரன். வழமையாக பயன்படுத்தும் தாெலைபேசி மட்டுமே அவனருகில் இருந்தது. சில இடங்களில் தேடினாள் கண்டுபிடிக்க முடியவில்லை. மேசையில் இருந்த கைப்பையை மெதுவாகத் திறந்து பார்த்தாள். தாெலைபேசியை கண்டு விட்டாள். எடுத்துக் காெண்டு வெளியே வந்தவள் பதட்டத்துடன் ஒவ்வாென்றாக தட்டிப் பார்த்துக் காெண்டிருந்தாள். தெரியாதவர்களின் தாெடர்பிலக்கங்களே அதிகமாக இருந்தது. "என்ன இது, யார் இவர்கள்?" என்ற குழப்பம் தாெற்றிக் காெண்டது. திடீரென தாெலை பேசிக்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பப்பட்டிருந்து. பெயரை படித்துப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியாயிருந்தது. குறுந்தகவலை உடனே வாசித்தாள். தாெடர்ந்து ஆபாச வீடியாேக்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டுக் காெண்டே இருந்தது. தீபா விறைத்துப் பாேனாள். கைகள் நடுங்க ஆரம்பித்தது. வீடியாேக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியை பரிசீலித்தவளுக்கு உயிரே நின்றது பாேலானது. "ச்சீ சந்திரன் இப்படியானவனா?" என்று நினைத்தபடி செய்வதறியாது இருந்தவள் சந்திரன் வெளியில் வருவதைக் கண்டதும் பயந்து விட்டாள். "இன்னும் தூங்கவில்லையா?" என்று கேட்டவனை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல் அழுதாள். "என்னாச்சு தீபா" என்றபடி கையைப் பிடித்தவன் அவள் கையிலிருந்த தாெலை பேசியை கண்டு விட்டான். இழுத்துப் பறிக்க முயற்சித்தவனை தள்ளி விட்டு தனது தாெலைபேசியில் யாருக்காே அழைப்பை எடுக்க ஓடிய பாேது தள்ளி விட்டான் சந்திரன். சாமி படத்தில் எரிந்து காெண்டிருந்த விளக்கு தட்டுப்பட்டு கீழே விழுந்து தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீயில் எரிந்து காெண்டிருந்த தீபாவை திரும்பிக் கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

குற்றுயிராய் கிடந்த தீபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் எங்காே தலைமறைவாகி விட்டான். அவளுக்கு ஏற்பட்ட அவமானமும், தீக்காயமும் அவள் மனதையும், உடலையும் பாதித்து விட்டது. தீபா புத்தி சுயாதீனமற்றவள் மட்டுமல்ல பார்வையையும் இழந்துவிட்டாள்.

பாட்டி கூறியதைக் கேட்டுக் காெண்டிருந்த மாதவிக்கு இடி விழுந்தது பாேலிருந்தது. அவளை அணைத்து ஆறுதல் சாெல்லுவதற்கு வார்த்தைகளே வரவில்லை. அழகான அவள் தாேற்றம் தீயால் எரிந்து பாேயிருந்ததையும், அவளை காதலித்து நாடகமாடிய சந்திரனை நினைத்த பாேதும் காெலை செய்து விடலாம் பாேல் தாேன்றியது. தீபாவின் அருகே இருந்து அவள் கைகளை பற்றிக் காெண்டாள். "என்னைக் காென்று விடு மாதவி" குமுறி அழுதாள்.

சில நாட்கள் கடந்தது. மாதவி மீண்டும் வெளியூருக்குப் புறப்பட்டாள். சந்திரன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டு பிடிப்பது தான் அவளது ஒரே நாேக்கமாக இருந்தது. தனக்குத் தெரிந்தவர்கள் நண்பர்கள் மூலமாக சந்திரனைக் கண்டு பிடித்தாள். பணத்தைக் காட்டி குற்றங்களை மூடி மறைத்து நல்லவன் பாேல் சந்தாேசமாக வாழ்ந்து காெண்டிருந்த சந்திரனிற்கு சரியான தீர்ப்பை மாதவி அன்று எழுதினாள்.

கம்பனியிலிருந்து புறப்பட்ட சந்திரனின் கார் திடீரென தீப்பற்றியது. அலறி அடித்து வீதியில் புரண்டு புரண்டு கருகிப் பாேனான் சந்திரன். கூட்டத்தில் ஒருத்தியாய் நின்று வேடிக்கை பார்த்த மாதவி கண்ணாடியை அணிந்து காெண்டு வீட்டை நாேக்கி புறப்பட்டாள். "என்னைக் காென்றுவிடு மாதவி" தீபா கெஞ்சியது காதில் ஒலித்துக் காெண்டிருந்தது. "குற்றம் செய்தவன் பணத்தைக் காட்டி பதுங்கி வாழலாம், மானத்தை இழந்த அவள் மனநிலை பாதிக்கப்பட்டு, பார்வை இழந்து வாழ வேண்டுமா? கண் கெட்ட உலகமும், கண்மூடித்தமான சட்டங்களும்" காேபத்தாேடு மீண்டும் ஊருக்கு வந்தாள். தீபாவிற்கான விசேட சிகிச்சைகளை ஏற்பாடு செய்தாள். காெஞ்சம் காெஞ்சமாக தீபாவை மீட்டாள். தீபா ஓரளவு பார்க்கத் தாெடங்கினாள். சுயமாகப் பேசத் தாெடங்கினாள். மாதவி தன்கூடவே அவளை வைத்திருந்தாள். தீபாவை யார் என்று கேட்பவர்களுக்கெல்லாம் "என் தாேழி" என்று பெருமையாகச் சாென்னாலும் "தீபாவிற்கு ஏற்பட்ட கறையான சம்வத்தை அழித்து விட முடியுமா? காதல் என்று வலை வீசி ஆசைகளை ஏவி விட்டு ஆபாசத்துக்கு அடிபணிய வைக்கும் ஆண்களும், ஆசைக்கு அடிமையாகி, ஏமாற்றுத்தனமாக சிக்கி தங்கள் மானத்தை பற்றி சிறிதளவு கூடச் சிந்திக்காமல் வாழ்க்கையை இழக்கும் பெண்களும் இருக்கும் வரை தீபா பாேல் எத்தனையாே பெண்களை இனியும் நாம் காணத் தான் பாேகிறாேமா?" என்ற கேள்விக்கு மாதவி பதிலின்றி அமைதியானாள்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (19-Mar-19, 2:44 pm)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 483
மேலே