அனுபவிக்க வேண்டியவைகள்

அன்பினால் ஏமாறுதல் களைய வேண்டும்
ஆழ்மனதில் எண்ணியதை செயற்படுத்தல் வேண்டும்
இளமையான உடல்வாகு என்றும் வேண்டும்
ஈட்டிப் போல் கூரிய சிந்தனை வேண்டும்
உடலுக்கு உயிர் ஒத்து போதல் வேண்டும்
ஊற்று போல் நல் எண்ணம் உண்டாதல் வேண்டும்
எவ்வுயிரும் தீங்கின்றி வாழ்தல் வேண்டும்
ஏர் நிலை என்றும் ஏற்றத்தில் வேண்டும்
ஐயம் இன்றி அகிலமது அழகுற வேண்டும்
ஒப்பற்ற இவ் வாழ்வில் சாதிக்க வேண்டும்
ஓராயிரம் தொழில் கற்று உவகை கொளல் வேண்டும்
ஒளவியம் அகன்று நல் வாழ்வு வாழ்தல் வேண்டும்

கண்டதில் கலப்பினமின்றி பேசுதல் வேண்டும்
காலத்துள் கடமையை முடித்து விடல் வேண்டும்
கிழப்பருவம் வருமுன்னே பொருள் காண வேண்டும்
கீழ்த்திசை சிவக்குமுன்னே துயில் களைய வேண்டும்
குறிப்பறிந்து குறை களையும் சுற்றம் பெற வேண்டும்
கூடி பிரியினும் இரகசியம் காத்தல் வேண்டும்
கெடுக்கும் மனம் விடுத்தல் வேண்டும்
கேள்வியால் அறிவு தெளிதல் வேண்டும்
கையறு நிலையிலும் உண்மை காணுதல் வேண்டும்
கொடுத்தோரை குன்றாக எண்ணுதல் வேண்டும்
கோள்களின் திறன் தேடுதல் வேண்டும்
கெளரியர் போல் தமிழ் காத்தல் வேண்டும்
- - - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (19-Mar-19, 7:36 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 90

மேலே