இன்பமும் துன்பமும்

இன்பம் வேண்டுவார் துன்பம் வேண்டாப்பெறுவர்,
இன்பமும் துன்பமும் அனுபவிப்பவன் ஆதிமூலமென்றே ஒருமையில் காண்கிறேன் உலகை நானே!

நான் காண்கிற உலகம் ஒருமையான ஆதிமூலத்தை உணராமல் இருமையென்றும் மூன்மையென்றும் நான்மையென்றும் எண்ணற்ற எண்மையில் மூழ்கி ஆடுகிறது பண்பற்ற சிற்றின்பக் கூட்டிலே.

கூட்டிலே உள்ள உயிர் காற்றிலே கரையும் முன்னே என்னவெல்லாம் செய்கிறது தானென்ற அகந்தையில்.
எல்லாம் செய்து எல்லாம் அறியாமை மூழ்கி உடல் இளமை கெட்டொழிந்த பின்னே ஆதிமூலத்திடம் அடிபணிய நினைப்பார், அதில் பயனென்ன?
பகட்டாய் வாழ்ந்த வாழ்வெல்லாம் வீண்தானே!

விதவிதமான ஆயுதங்கள் அழிவை உருவாக்கக் காத்திருக்க மேலும் மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் மனிதர்கள் தங்கள் வாழ்வை நிரந்தரமென்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களா? சமந்தமே இல்லாத ஒரு சிலருடைய பகைமை நாட்டுகளின் பகையாக, மார்க்கங்களின் பகையாக மாற்றிவிடப்பட்டிருக்க, அறியாமையால் நாமும் ஏற்றுக் கொண்டு அகம்பாவம் மேலிட தன்னை சார்ந்தாரே சிறந்தவர்கள் என்று கூறித் திரிகின்றோம் கூமுட்டைகளாய், எல்லா சிறப்பிற்கும் உரியவன் ஆதியான அருட்பெருஞ்சோதி மட்டுமே என்பதை மறந்து தலைவிரித்தாடும் மனவழுக்கால்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Mar-19, 9:17 am)
Tanglish : inbamum thunbamum
பார்வை : 1676

மேலே