புரிந்திட வேண்டும் தோழா

புரிந்திடு தோழா
இது புதுமையான
உலகமடா....!
நீ நல்லவன் அதனால்
எல்லோரையும் நல்லவராகப்
பார்க்கிறாய்...
இங்கு நல்லவவரை
விட
நல்லவராய் நடிப்பவர்
தான் அதிகமடா...!

நீ யாராகவும்
மாற தேவையில்லை..
நீ நீயாக இருந்தாலே
போதும்டா தோழா...
உனக்கென நல்ல
கொள்கைகளுடன் பயணி
உன் தனித்துவம்
தான் உன்னை
ஜெயிக்க வைக்கும்..!

உன் மனதில்
நல்ல நினைவுகள்
மட்டும் இருக்கட்டும்..
தீயவற்றை எரிந்து
விடு...
அவை உன்னை
பலவீனமாக்கும்..!

தோழா நீ
சாதிக்கப் பிறந்தவன்...!
சாதாரணமாய் வாழ்வை
கழிக்காதே...உன்
திறமைகள் பலருக்கு
பயன்படணும்....!

முடிந்து போனதை
எண்ணி வருந்தாதே..
இனி வரும்
காலத்தை திட்டமிட்டு
பயன்படுத்து...
நீ சரித்திரம்
படைப்பாய் தோழா....!

எழுதியவர் : (21-Mar-19, 1:55 pm)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
பார்வை : 107

மேலே