மூடி மறைக்க கற்றுக்கொள்

பெண்ணின் கண்ணோரம்
மின்னும் மின்சார துகளொன்று
தூண்டியதென்று துள்ளியாடும்
நண்பனே....

காதல் நரம்பொன்று
உருவெடுத்து -- அது
ஒருத்தியின் கண்ணகளால்
படையெடுக்கும் போது! மூலையென்ற
கோட்டையை விட்டு
அறிவென்பது அனாதையாகுதோ!

உறவுகளோடு கைக்கோர்த்து
உல்லாசத்தில் மதி சாய்து
வாழும் நாட்களெல்லாம்
மறதியின் "தீ"யில் உன் மனம்
தீபமாய் மாறுகிறதோ!

தன்னுள் நடப்பதை
தானே அறியாமல்
விண்ணில் பறக்கும் விந்தையானது
தோன்றும் போது -- வாழ்வின்
அவதரிப்பு அவளுக்கென்று
உன் எண்ணம் அலைபாயுதோ!

ஒரு பார்வை பார்த்து
சில வார்த்தை பேசி
அவள் முகமெல்லாம்
அபிநயமாக மாரும்போது!
கவிநயம் உன்னை தீண்டுதோ!

பார்பதெல்லாம் அழகாக மாரி
காட்சிகளெல்லாம் அவளாக சீறி
சிற்றின்ப ஆசைகளில்
சின்ன பூவாக
சிந்தனைகள் மலர்கிறதோ!

உலகின் அதிசயங்கள் அணைத்தும்
அவள் காலடியில்
மண்ணாக மாற்ற
நீ மன்னனாக முயற்சிக்கிறாயோ!!

தன்னிடம் படரும் நிழலுக்கு
உயிர் கொடுத்து -- அது
உன்னவளாக உருவெடுத்து
உன் வார்த்தைகளை கேட்டும்போது
எத்தனையோ கேளிக்கைகள்
உன்மேல் கேள்விக்குறியாகிறதே....

ஈரம் சொட்டும் கூந்தளில்
மணம் வீச
ஒரு ஜென்மம் கேட்கிறாய்

திலகமிடும் நெற்றியைத் தீண்ட
தினமொரு மரணம் கேட்கிறாய்

சுழலும் விழியோடு
ஆயுள் முழுதும் மூழ்க
ஐனனம் ஒன்று கேட்கிறாய்

மூச்சுக் காற்றை பறிக்கும்
மூக்குத்தி ஒளியில் சேர
சுவாசமாக உற்று நோக்குகிறாய்

திறக்காத அனைக்கதவாக
அவள் இதழ்களை திறக்க! அதை
கண்டு உன் வாழ்வின்
தாகத்தை தீர்க்கிறாய்

இடுக்கு பல் அழகோடு
துணைபோட
தூண்டில் போடுகிறாய்

தேகம் தொட்ட மச்சத்தில்
ஒரு பாகம் கேட்டு
உயிரோடு உரிமையை வளர்க்க
மதியோடு போராடுகிறாய்

கனவாய் கழுத்தோடு
மெதுவாய் முத்தமிட
மோகத்தில் திறிகிறாய்

அங்கம் உரசும் தங்கமாக
தலைவி அவள் மேல் பூக்க
அனுதினம் புரட்சி செய்கிறாய்

அவளின்
கட்டுரை இடையோரம்
மெட்டுரை பாடி
மெதுவாக இசையமைக்க
கற்பனை வளர்க்கிறாய்

கை விரலோடு விருப்பம் பேச
கால் விரலோடு வெட்கம் கூச
இடைவெளி விடாமல்
சமவெளியாக மாற
சாமர்த்தியம் செய்கிறாய்

என்னை இழந்தும்
உன்னை அடைவேனென்று
எழுந்து நிற்கும் "நண்பனே"! உனது
இத்தனை மாற்றத்தில்
எத்தனை அவள் அறிவாள்
எப்படி புரிவாள்

பாலைவன நீரூற்று
அவள் ஆசை
பார்கடல் நீராக
உன் எதிர்பார்ப்பு
இரண்டும் இணைய
இங்கு வழி உண்டா

உலக மொழிகளெல்லாம்
அவள் காலடியில் கொட்டினாலும்
வார்த்தை ஒன்றை வீசாமல்
உன் வயதை சோதிப்பாள்

உலர் கூந்தளோடு
உறவாட விடாமல்
உன்னை உளற வைப்பாள்

புரியாத வார்த்தைகளை பேசி
உன்னை புலம்பவைப்பாள்

கொஞ்சி பேசும்
பேச்சை வைத்தே
உன் நெஞ்சை கொள்ளையடிப்பாள்

புன்னகை ஒன்றை வைத்து
உன்மனதை புண்ணாக மாற்றுவாள்

உரிமைகளை அதிகரித்து
உள்ளமதை அவகரிப்பாள்

ஓரப் பார்வையை வீசி
ஒன்றுமில்லாமல் மாற்றுவாள்

எட்டி அவள் பார்ப்பாள்
ஏமாற்றம் நீ அடைவாய்

தொட்டு பேச
நீ விருப்புவாய்
விட்டு விலக
அவள் விரும்புவாள்

நீ நிழலில் பூப்பறிப்பாய்
உன்னை நிமிர்ந்து பார்க்காமல்
அவள் வெறுப்பாள்

உறவு நீடிக்க
நீ எண்ணுவாய்
உன்னை சோதிக்க
அவள் எண்ணுவாள்

நித்திரை இல்லாமல்
நீ காய்வாய்
நிம்மதியாக அவள் வாழ்வாள்

தலைசாய மடி நீ கேட்பாய்
மதிசாய மருகி அவள் பார்ப்பாள்

பகலிலும் அமைதியாக
அவள் வாழ்வாள்
இரவோடு போராடியே
நீ சாவாய்

காதலை சொல்
என்பதே "உன் கதி"
கட்டவிழ்காத மௌனமே
அவளின் "சன்னதி"

உலையாய் உன்மனம் கொதிக்கும்
உமியாய் அவள்மனம் பறக்கும்

கடல் நீராக
உன் ஆவல்
கானல் நீராக
அவளின் ஊடல்

பிம்பமாக அவள்
பித்தனாக நீ

பொய்யான வாழ்வில்
மெய்யாக நீ
மெய்யான வாழ்வில்
பொய்யாக அவள்

காலமெல்லாம்
கண்ணோடு நீ
காரணத்தோடு அவள்

சேர்கும் காற்றாக நீ
விலகும் மேகமாக அவள்

மாறும் நாட்களில் அவள்
ஏமாறும் நாட்களில் நீ

இறுதிவரை மூடி மறைக்கும் அவள்
உறுதியோடு தாடி வளர்க்கும் நீ
பேசாமல் போகும் பேதைக்காக
மேதை நீ தாடி வளர்க்காதே!!
இரக்கமில்லாமல் உள்ளத்தை
வெறுக்கும் அவளோடு -- உன்
இருதயத்தின் ஈரத்தை காட்டாமல்
மூடி மறைக்க கற்றுக்கொள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Mar-19, 8:07 pm)
பார்வை : 555

மேலே