தில்லை அம்பல நடராஜா
(1) கங்கை அணிந்தவா!
கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா!
லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!
.
(2) தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
(3) அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வாஅல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
.
(4)எங்கும் இன்பம் விளங்கவே........)எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதேஎங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
(5) எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா.எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
(6) பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
(7) கலையலங்கார பாண்டிய ராணி நேசாகலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
============================================================
தற்போது அபஸ்வரமாக.இசையமைக்கும் புதிய ஒருசிலஇசையமைப்பாளர்கள்.பழயபாடல்களை கேட்டாலே .. போதுமே. ஞானம்பிறக்கும்
காலத்தால் அழியாத பாடல்.
பாட்டுக்கோட்டையாரின் அழகான பக்தி பாடும் சொல்லாடல் ... ஆஹா ..
மனித வாழ்வின் கசப்புகளை பாடிய கல்யாணசுந்தரம் .. இறைவனின் இணையில்லாத பெருமையை பாடிய அற்புதம் இந்த பாடல் ..
பாடலின் சந்த ஓசையை பாடலாக புனைவதில் வல்லவர் ...
"கலையலங்கார பாண்டிய ராணி நேசா .." என்று தில்லை அம்பலநடராஜனை பாடுவது ...
தமிழுக்கு தன் குரலால் வளம் சேர்த்த பாடகர் சௌந்தர்ராஜன் ...
ஆண்டவனின் புகழ் பாடும் வளம் தமிழ் மொழிக்கு நிறைய உண்டு ..