அவள் அன்னம்
நீலவான தடாகத்தில்
நீந்திவரும் அன்னமே
வான் நிலவே , என்னவளும்
என் மனதாம் தடாகத்தில்
நீந்திவரும் பெண்ணிலவு
அன்னமே உன் பொழில்
முழுமை பௌர்ணமியில்
என்னவளோ என்மனதில்
என்றும் எழில் பொங்கும்
பூரண நிலவாய் நீந்திவரும்
வெள்ளை அன்னம்