அகிலமும் உனக்கானது

ஆடுடா கண்ணா ஆடு
ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆடு
அகிலமும் உனக்கானது என்று
ஆடிப்பாடி விளையாடு

தேவையானதை தேடி ஓடு
தேர்ந்தெடுத்த எல்லாற்றையும் கூட்டு
திறம்பட அவைகளில் புலமையாகு
திறமையைக் காட்டி உச்சம் தொடு

பல கலையை கற்றுக் கொள்ளு
பயமில்லாமல் பாரை சுற்று
பஞ்சமா பாதகத்தை விட்டு விடு
பகுத்தறிவை வளர்த்துத் தெளிந்து
பால் வெளி மண்டலத்தை எல்லாம் ஆளு.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Mar-19, 7:08 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 90

மேலே