வேசி ஊடகம்
![](https://eluthu.com/images/loading.gif)
நூறுபல ஆசான் கைத்திரிந்து
சிலநூறுகளாய் ஆண்டுவந்த பேனாமுனை !
புரட்சிகள் புகுத்தூட்டி யெங்கும்
புதுமை விதைத்தது இந்தமுனை !
அரசனேற்கும் செங்கோலினு மோங்கி
உயர்ந்தது இக்கூரிய மழுங்காமுனை !
உண்மையின் உரைகல்லாய் ஓதுமேயன்றி
ஒருபோதும் விலைப்போகா நின்றமுனை !
இன்றோ ! கண்டுக்கேட்டதை திரித்து
காணாப்பொய் நிழலைப் பரப்புவதோ !
முறைத்தவறி விலைபோன பெட்டையாய்
கடமைத்தவறிய நீயோ ! “வேசி ஊடகமே “ .
எல்லையில் காப்போனை இந்தியனாகவும் !
எல்லையைத் தாண்டுவோனை தமிழனாகவும் !
இகல்பேசி இனியோனை மறைத்துதம்
புகழ்ப்பேசி நிழலோனைனின்று ஏற்றுவதோ !
நிதியேற்று நீதிதன் முறைமையழித்து
நின்சுயக் கற்பனைக் காட்சியளித்து !
கற்றோனையும் கட்டி கண்ணிறங்கச்செயும்
கானல்நீரே அச்சகமேற்கும் தர்மமோ !
பகலிட்டுப் பாடுபடுவோனை மறந்து
பாதியாய் அலைவோனை(ளை) தரிக்கும் நீ!
உடல்கூறு விலையேற்கும் வேசியாய்
தன்கூறு திரிந்தழிந்த “ ஊடக வேசியே“. !
- உண்மையை உள்ளதை உரைப்போம் ; மா.சங்கர்