உணவின்றி உயிர் வாழ

உணவின்றி உயிர் வாழ
ஒவ்வொருவரும் கத்துக்கணும்
ஒருத்தன் உழைப்பில் பிழைப்பை நடத்தும்
உத்தியை நாளும் குறைச்சிக்கிணும்
அச்சடித்த பணத்தின் தரத்தை
சிறிது சிறிதாய் குறைச்சிடணும்
ஆளாளுக்கும் உழைத்து கூட்டி
ஒவ்வொரு வேளையும் உண்ணுடணும்
பணம் கொடுத்து பண்டம் கேட்டால்
பன்மடங்கு விற்றுடணும்
பண்டம் கொடுத்து பண்டம் பெறுவோருக்கு
பரிசுகள் பல தந்திடணும்
உண்ணும் உணவில் உபரி வரின்
உலகத்தோருக்கு பகிர்ந்திடணும்
ஒவ்வொரு நாளும் உள்ள பொழுதை
உழைப்பினாலே கழித்திடணும்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Mar-19, 5:53 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 61

மேலே