கும்பிட்டு தொழுதேன்

அழகு தமிழின் மூலமான
பழனிமலையின் அழகனே
பார்த்தவுடனே பலங்கொடுக்கும்
பழந்தமிழின் வேந்தனே
அணி அணியாய் சீடரைக் கொண்ட
ஆற்றல் மிக்க தலைவனே
அற்புதமாய் பொற்பாதம் காட்டி
அணைத்துக் கொள்ளும் தோழனே
கிழப்பருவம் என்றும் எய்தா
கொள்ளை அழகு கோபனே
கும்பிட்டு தொழுதேன் உன் உரு கண்டு
பண் இட்டு பாடி பரவசமடைந்தேன்.
- - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (1-Apr-19, 5:29 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 195

சிறந்த கவிதைகள்

மேலே