என் தமிழ் அமுது

ஏட்டில் சுவைத்தான் சித்தன்,
பாட்டில் சுவைத்தான் பாரதிதாசன்,
கற்பனையில் சுவைத்தான் கம்பன்,
விற்பனையில் சுவைத்தான் வாலி,
பாவையாய் சுவைத்தான் பாரதி,
சேவையாய் சுவைத்தான் கண்ணதாசன்,
கலையாய் சுவைத்தான் கருணாநிதி,
அன்னை பாலாய் சுவைத்தான் அண்ணா,
யாதென்று அறிந்தாயா கண்ணா...!
பலர் உண்டு சுவைத்தாலும்,
அள்ளி பருகினாலும்,
தின்று தீர்த்தாலும்,
தீராத, திகட்டாத தெள்ளமுது,
என் தமிழ் அமுது.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (1-Apr-19, 1:55 pm)
பார்வை : 2020

மேலே