பொக்கிஷம்

மனித மனதின்
பேராசைகள்

ஒளிந்து இருக்கும்
விந்தையாய்

உலவிய மனிதன்

துழவி சேர்த்து
ஒளித்துவைத்து

ஒருவருக்கும் உதவாது
மறைந்துபோக

பேராசையும் ஊமையாய்

பெருஞ்செல்வமும்
ஊமையாய்

தேடாது அதுகிடைக்க

பேராசையின் மறு
ஜென்மம்

பொக்கிஷம் ஆனது..,

எழுதியவர் : நா.சேகர் (2-Apr-19, 12:15 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pokkisham
பார்வை : 286

மேலே