தமயன் வேண்டும்
இறையருளே!
மறுபிறவி எனக்கிருந்தால்
மகிழ்ந்து கூடி வாழ தங்கை என்னுடன்,
பாசத்தை பகிர்ந்து கொள்ள,
பாங்குடன் பழகி களிக்க,
பாசாங்கில்லா பந்தம் கொள்ள;
பாராளும் வேந்தனை மைத்துனனாக்கி
பாற்கடலில் உதித்த அமுதாய், தெளிந்த
பால் போன்ற என் மக்களை, மாமன் அவன்
பாச மலையில் னைத்து மகிழ; தாலாட்டு
பாடல்கள் பாங்குடன் பாடி, தங்க
பாதங்கள் நான்கும் தரையில் பட்டது தாங்க,
பாசமலர் நீ பல்லாண்டு வாழ
பாதைகள் நூறு வகுப்பேன் என் சூளுரைக்க
பாவை எனக்கோர் தமையன் வேண்டும்......!
இவண்
சங்கீதாதாமோதரன்