தட்டில் சோறு வர
தட்டில் சோறு வர தரணியில் மழை வேண்டும்
தட்டான் பறந்து வர தடதடனு மழை பொழியும்
கட்டாய் இருக்கும் வரை கருங்கூந்தல் அழகாகும்
கருத்தாய் நடந்தால் தான் வாழ்வு உன் வசமாகும்
வெடிப்பு என்பது பூமியின் வியற்வைத்துளி போன்றதுவே
வெவ்வேறு காலங்களில் இதன் வடிவு நிலை மாறிடுமே
காடும் மலைகளுமே பூமி காயத்திற்கு மருந்தாகும்
கடும் அழிப்பு செய்து விட்டால் காலந்தோறும் அழிவாகும்
பகுத்தறிவு பெற்றதனால் பல்வகை அழிவாச்சு
பணம் பொருள் கொடுத்தாலும் பழைய நிலை வந்திடுமோ.
--- நன்னாடன்