மரம் பேசினால்

மரம் பேசினால்

மரமான என்னை சாய்த்துவிட்டு
மழைவேண்டி வேள்வி செய்கிறாய்.

கொடுத்தேன் பலவற்றை உனக்கு
கொடைவள்ளல் என்று
கூறி கொள்ளாமல்
கோடரியை அல்லவா
பரிசாக அளித்தாய் எனக்கு

இரண்டாக என்னை நீ
பிளந்தபோதும்
இரக்கம் கொண்டேன்!! நீ
இறந்தபோது
என்னைக்கொண்டு
சுமக்க செய்தேன்!!
இறுதி சடங்கில் உன்னுடன்
உடன்கட்டை ஏறினேன்.

சேதுராமன் சங்கர்

எழுதியவர் : SANKAR SETHURAMAN (5-Apr-19, 9:42 am)
சேர்த்தது : SANKAR
Tanglish : maram pesinal
பார்வை : 127

மேலே