சுகமான நினைவுகள்

கால வெள்ளம்
அடித்து செல்ல
கரையோரம் மாறிப்
போக
திருவிழா என்று
ஊர் அழைக்க
ஆசையோடு பழசும்
கூடவர
உள்ளமோ உல்லாச
ஊஞ்சலில்
சாலையோர ஆலமர
ஊஞ்சலாட்டம்
நினைவில் நிழலாட
உறவுகள் கண்முன்
ஊஞ்சலாட
எதிர்பார்போடு ஊர்
பயணம்
வழிநெடுக மாறி
போக
காணாது போன
பச்சையம் வரவேற்க
மரங்கள் இன்றி
மலடாய்
ஆடிக்களித்த எங்கள்
ஊர்
வெய்யிலுக்கு ஒதுங்க
நிழலின்றி