கவிஞர் பழனியப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கவி

நீ சுந்தரத்திற்குப்
பிறந்த சுந்தரன்....

சகுந்தலை கண்டெடுத்த
தலைவன்....

சுந்தர பழனியப்பனை
கவிஞர்கள்
சு பா என்றே
அழைக்கின்றனர்...
நீ பண்ருட்டி சுப்ரமணிய பாரதி ........

நீ
இந்த அகவையில்
தலை மை ஏற்காதவன்
தமிழ் சங்கத்திற்கு
தலைமை ஏற்றவன்.....

நீ
பண்ருட்டியில்
கலைத் தாயின்
கலைப்பசி தீர்த்த
பண் ரொட்டி.....

நீ அம்மாபேட்டயின்
பேட்ட
அம்மாவே வேணாம்
குழந்தை உறங்கும்
கேட்டால் நீ பாடும்
பாட்ட......

பண்ருட்டி நீ
தமிழ் ஆளும் கோட்டை.....

நீ
ஆணையிட்டால்
யாரும் தாண்ட மாட்டார்
உன் கோட்டை .....


பழனி அல்ல நீ
அறிவில்
நன்கு கனிந்த
பழம் நீ......

தன் உடலில்
சக்தியை பாதி
கொண்டவன்
பழனியின் அப்பன்.....

தன் உடல் முழுதும்
சக்தி கொண்டவன்
சுந்தர
பழனியப்பன்.....

நீ
திறமையான
கவிகளுக்கு விருதும்
கொடுப்பவன்
விருந்தும் கொடுப்பவன்......

தமிழ் அன்னை
சூடிய பூ உன் பிறப்பு
அது தமிழுக்கு
சிறப்பு.....

உன் கற்பனை
அனைத்தும்
தமிழ் கள் வடியும் பனை.....

அது நன்றாக
ஆகின்றது கடைகளில்
விற்பனை.....

நீ
நல்ல
புத்தகம் படிப்பவன்....

அதைவிட
நல்ல
புத்தகம் படைத்தவன்.....

அன்பு
அண்ணனே!...

வானவில் வண்ணனே...
வாழும் கண்ணனே....
தமிழ்ச்சங்க மன்னனே....

இந்தியப் பெருங்கடலாய்
உன் புகழ்
நீண்டிருக்கட்டும்
இவ்வுலகை ஆண்டிருக்கட்டும்
துணையாய்
இந்த ஆண்டிருக்கட்டும்...



எழுதியவர் : புதுவைக் குமார் (4-Apr-19, 3:14 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 62

மேலே