நீயின்றி நானேது
தொலைக்காதே தோழமை....
தோள் கொடுப்பவனும்
தோளில் சாய்பவனும் தோழன்
அவனை என்னில் பார்க்கிறேன்
கண்ணாடி தேவையில்லை என் முகம் பார்க்க
என் அகமே அவனாக என் முன்னிலையில்
நான் தோழன் என்பதில் பெருமையில்லை அவனுக்கு
அவன் என் தோழன் என்பதில் தான் எனக்கு எல்லாமுண்டு.
அவன் உன் நண்பனா /
என ஆச்சரியத்தோடு கேள்வி கேட்பவரும் ,
மனதிற்குள் பொறாமைப் படுபவரும் உண்டு ,
நண்பனே உனக்கு நிகர் நீதானே
எத்தனை புண்ணியம் செய்தாலும்
கிடைத்தற்கரிய சொத்து, சொந்தம் உண்மையான நட்பு மட்டுமே
நண்பனே நண்பனே உன் நிழலாக நான்
எனது உயிர் நீதானே, நீயின்றி நானேது /
கடவுள் என்னைப் படைத்ததிலும்
மிகப் பெருமையும் வலிமையும்
எனக்கு நண்பனாக உன்னைப் படைத்ததே .
நண்பனே / நண்பனே/
அன்னையைப் போல் நண்பனும் உண்டு .
நண்பனைப் போல் எவருமுண்டோ/