விடுதலைப்பேரவா
செந்நிற பூமியில்
கூடு இழந்த குஞ்சுகளுக்காய்
தாய்ப் பறவை செங்களத்தில்
உயிர்காக்க குஞ்சுகள்
நட்சத்திரம் ரசித்த வானில்
உயிர் குடிக்கும்
தீப்பிழம்புகளுக்குள்,
விடுதலைப்பேரவாவை
விழுங்கிய ஆதிக்கங்கள்
நாங்கள் வீழ்ந்திடினும்
எங்கள் குருதிகள் காயாமல்
எங்கள் உறுதிகள் சாயாமல்
தான் இருக்கு இந்த செங்கள
பூமியில்,