பாம்பைக் கூட பழக்கி வளர்க்கும்
மனிதர்களே மனிதர்களே மாண்புமிகு மனிதர்களே
மயக்கமின்றி மதிக்கூர்ந்து கவனமுடன் இதைக் கேளுங்கள்
உரமுள்ள உன் உடலில் ஊதிரத்தை தனிப்பிரித்து
பிரதி உதிரம் செலுத்தும் கலை அறிந்திரே
பதறும் மனதுப் படைத்த உலகோர் வாழும் இடத்தில்
உதிரம் சிந்தா வாழும் முறையைக் கண்டீரா?
தவழும் குழந்தை அழகுச் சிரிப்பில் உள்ளம் மகிழும்
அவள் உடலில் புணர அரக்க எண்ணம் படைத்தது ஏனோ?
பாம்பைக் கூட பழக்கி வளர்க்கும் நல்லோரே
பாவம் பெண்ணை பாழாக்கி கொல்வதேனோ?
ஆசை களவு கோபம் கொண்டு வாழ்ந்து விட்டோம்
துரோகம் கொலையும் துர்எண்ணம் கொள்ளலாமோ?
அதிக தவறால் உலகு அதிரும் நிலை வந்தால்
ஆதி அந்தம் சிதைந்து உலகு அழிந்து போகும்.
--- .நன்னாடன்