விளைந்த நிலத்தை விற்று

பனை மரத்தை வெட்டி விற்று
பணங்காசை சேத்துக்கிட்டு
பள பளக்கும் ஆசையோடே
பட்டணந்தான் போயி சேர்ந்தேன்.

வீடுமில்லை விட்டமும் இல்லை
விளக்கெதுவும் சுவரில் இல்லை
தங்குவதற்கு இடத்தை ஒன்றை
தரகன் ஒருவன் காட்டினான் அங்கு.

பரந்தமனம் கொண்டு நாங்கள்
பாருக்கெல்லாம் சோறு போட்டோம்
விளைந்த நிலத்தை விற்று விட்டு
வேலைத் தேடி பட்டணம் வந்தோம்

காலைக்கடன் கழிக்க குளிக்க
காற்றை நீரை இழுக்க பருக
கண்டபடி காசை பிடுங்கும்
கருணையில்லா களமாய் நகரம்

உண்டித்தேடி அலைந்தால் கூட
உடல் அழுகி மாண்டல் கூட
உற்றத் தொழிலை விட்டு விட்டால்
குற்றம் உன்னை சூழ்ந்து கொல்லும்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Apr-19, 6:59 pm)
பார்வை : 233

மேலே