கவிதை தொடராய்
காதலென்று காமத்தை
பிய்த்து பிய்த்து
கவிதையாக்கி மனசை
நைத்து நைத்து
கோழையாக்கி உயிரை
இனவிருத்தி கருவி
என்பதை மறதியாக்கி
காமத்தை கருவியாக்கி
உணர்வை உருவாக்கி
உயிரை வாரிசாக்கி
ஊட்டி வளர்த்து
தெருவில் நிர்கதியாக்கி
காமத்தை பிய்த்து
பிய்த்து காதலென்று
சொன்ன கவிதை
தொடராய்..,