நிலவின் பதில்
சந்திரன் என்று ஆண்பால் கொண்டேன்
சந்தித்தவர்களின் பெண்பால் ஆனேன்
அலசியவர்களுக்கு அறியாமலே
அறிவியல் துணை கொண்டிட
உயிர் உற்பத்தியற்ற நான்
ஆண்பால் தானே...
வெண்மை நிறம் கொண்டு
வெம்மையின்றி உதித்திட
பலருக்கு நான் பெண்பால் தானே...
அவரவர் எண்ணம்போல்
அவர்களுக்கு துணையாக
இரவுகளில் மட்டுமல்ல...
பல பயணங்களிலும்...
நான் என்பால் உரைத்திடவில்லை
உங்கள் உருவகமே எனது பாலினமாக...