ப‌ரிசு

நீ தந்த உடையினிலே
வடிக்காதச் சிற்பமாய் நிற்க!!!
இரு உளிக் கொண்டு
மோகனச் சிலையாய் செதுக்க!!!
கண்களால் காதலை உதறி -
வெட்கத்தை சிறை வைக்கிறாய் -நீ !!!
நெற்றி குழல் ஒதிக்கி
உன் இதழ் பதிய
கண்மணிகள் மெல்ல மூடி
ரசிக்கிறேன் உன் முதல் பரிசை!!!!

இதமாய் சுவைத்து புணரும்
தேனில் நினைத்த கனியாய் !!!
மெல்ல நெருங்கி தீண்டும்
கரையைச் சேரும் அலையாய்!!!!
மயங்கி மடிச் சாயும்
மதுவில் நினைத்த மயிலிறகாய் -நான் !!!
உன் நகங்கள் முதுகிலே
நூறு ஓவியங்கள் வரைய
சங்குக் கழுத்தில் முத்துமாலை
அணிந்தாய் உன் இரண்டாம் பரிசை!!!!

விழிகளால் நாணங்களை தாழிட
பூவைச் சேர்ந்த வண்டாய் !!!!
மூச்சு யாக்கையைத் தாக்கிட
மண்ணைச் சேர்ந்த மழையாய் !!!
விரல்கள் இடையில் தாளமிட
இருளில் முழ்கிய நிழலாய் - நாம் !!!!!
உன் இதழ்களால் உயரிலே
எழுதுகிறாய் உயில்கள் பல
கம்பன் வரிகளைக் கோர்த்து
இசைத்தாய் - உன் மூன்றாம் பரிசு
என் பிறந்தநாள் பரிசு !!!!!!!

எழுதியவர் : (10-Apr-19, 2:24 am)
சேர்த்தது : Safeena Begam
பார்வை : 142

மேலே