அவள் ஒரு அதிசயம்
அவள் ஒரு அதிசயம்🌹
வானத்தில் இருந்து விழுந்த அபூர்வ நட்சத்திரம்!
பிரம்மன் படைப்பில் அவள் ஓர் அதிசயம்!
நாட்டியமே அவள் நடை
அது பேரழகு!
அவள் காந்த விழிகளால் என்னை கடத்திவிட்டதால்
என் இதயம் நிரந்திரமாக
அவள் இடத்தில்.
முழு நிலவு அவள் முகம்
முத்து சிதறல் அவள் சரிப்பு
அழகிய கவிதை அவள் பேச்சு
அவள் கொடி இடை
ஆச்சிரியம்
அபூர்வம்
உலக அதிசயம்
என்ன ஒரு வளைவு!
என்னே ஒரு நேளிவு!
ஓராயிரம் கவிதை எழுதலாம்.
கனிவான பெண்னே
என் கனியமுதே
இனிய தமிழ் பேசும்
இன்ப சுரங்கமே!
இதய சிம்மாசனத்தில் அமர்ந்து என்னை ஆட்கொண்ட
என் இதய ராணியே!
என் காதலை ஏற்றுக்கொள்.
வா என் கரம் பற்று
வானவீதியில் இருவரும் வலம் வருவோம் .
நிச்சயம் வின்மீண்கள்
உன் கண்களை பார்த்து பொறாமை படும்.
முகிலினங்கள் உன் கூந்தலை கவனித்து அழுக்காறு அடையும்.
நிலவு உன் அழகை கண்டு அவ்வியம் அடையும் .
அழகு பெட்டகமே
பேரழகியே
உன்னை நினைத்து
தவிக்கிறேன்
உன்னை அடைய
துடிக்கிறேன்
என் காதலை ஏற்றுகொள்.
- பாலு.