மனதின் மறுபக்கம்

ஏனோ மனசு இங்கு
திசைக் காட்டி ஆகி போனதே...
தடம் பார்த்து
உன் வாசல் வந்தேனடா...

ஏனோ நினைவுகள் இங்கு
துடுப்பாகி போனதே...
கண்ணீர் நதி தாங்கி
உன் கரை சேர வந்தேனடா...

ஏனோ தாபங்கள் இங்கு
ஏர்வாடியில் சேர்த்து போனதே...
மன காயங்கள் காய்ந்திட
உன் தோள் சாய வந்தேனடா...

ஏனோ உன் உருவம் இங்கு
ஊஞ்சலாடி போனதே...
இன்ப ராகம் இணைந்து பாட
உன் கரம் பிடிக்க வந்தேனடா...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (9-Apr-19, 10:30 pm)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : manathin MARUPAKKAM
பார்வை : 177

மேலே