தித்திக்கும் தேனாக நம் சந்திப்புக்கள் 555
அழகே...
நீயும் நானும் மாதத்தில்
ஓரிரு நாட்கள் மட்டுமே...
நாம் சந்திக்கிறோம்
வருத்தம்
கொள்கிறாய் நீ...
இது நமக்கு
பிரிவு
இல்லையடி...
நம் எதிர்கால வாழ்க்கையை
நோக்கிய பயணம்...
உன் மனதில் நானும் என்
மனதில் நீயும் இருக்கும் வரை...
பிரிவு என்பது நம் வாழ்வில்
என்றும் இல்லையடி கண்ணே...
தினம் தினம் சந்தித்தால்தான்
காதல் வளருமா...
சின்ன சின்ன
இடைவெளியில்தானடி...
நம் காதல் இன்னும்
அதிகமாக ஊற்று எடுக்கிறது...
நம் சந்திப்பும் முதல்
சந்திப்பு போலவே இன்பமாக...
ஒவ்வொரு முறையும்
வெட்கத்தோடு நீ சொல்லும் ஐ லவ் யு...
கோடிகள் கொடுத்தாலும்
கிடைக்காதடி அந்த இன்பம்.....