ஆற்றலை விரிவாக்கு

ஆற்றலை விரிவாக்கு

எச்சில் இழைக்கொண்டு
சிக்கல் இல்லா வலைபின்னும்
சிலந்தியின் ஆற்றலை பார்
இரும்பு என்று தெரிந்ததும்
இழுத்து பிடிக்கும் காந்தத்தின் ஆற்றலை பார்
இயந்திர திறன் ஆனாலும்
குதிரை திறனில்
குறிப்பிட்டு சொல்லும் ஆற்றலை பார்
கூரிய அலகை மட்டுமே கருவியாக கொண்டு
கூடுக்கட்டும்
குருவியின் ஆற்றலை பார்
விந்தையான விருட்சம்
விதைக்காமல் முளைக்கும்
வாழையின் ஆற்றலை பார்
குருநாதர் இல்லாமல்
குறிப்பிட்டவர்களின் ஆற்றலை பார்
குருநாதர் இருந்தும்
கொண்ட ஆற்றல்
குறுகிய வட்டத்தில் இருப்பதை பார்
விட்டத்தின் எல்லையை விரிவாக்கு
வட்டத்தின் எல்லை வானாகும்
வளர்ந்திருப்பது உன் ஆற்றலே ஆகும்.

சங்கர் சேதுராமன்

எழுதியவர் : SANKAR SETHURAMAN (11-Apr-19, 7:32 am)
சேர்த்தது : SANKAR
பார்வை : 37

மேலே