பெண்

மல்லிச்செடி பருவமடைந்தது, செடியெல்லாம்
அரும்பி வழிந்தது சிறு மொட்டுக்கள்,
ஆனந்தம்பொங்க நாளை மணக்கும் பூவாய்
மல்லிகைப்பூவாய் பூத்து குலுங்க !
பெண்ணிவள் பருவமங்கையானாள் முகத்தில்
சிறு முத்துக்களாய், மொட்டுக்களாய்ப் பருக்கள்
இங்கும் அங்கும் அவள் நாளை பூக்கும்
மலரென்று பார்ப்பவர் கண்களுக்கு சொல்ல
பருக்களும் மறைந்திட அவள் முகம் இப்போது
ஆனந்தம் பூத்து குலுங்கியது அதனால் பெண்ணே
நீயும் மலர்தான் உன் பருவ பரிணாமவளர்ச்சியில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Apr-19, 11:50 am)
Tanglish : pen
பார்வை : 86

மேலே