எது அழகு

பார்த்த உடன் மயக்கும் மங்கை உந்தன் முகம் அழகா!
மாசில்லா மழலை மனம் அழகா!
கார்மேகக் குயில் கருங்கூந்தல் அழகா!
வளைமதி வந்தொன்றிய வானவில் நுதல் அழகா!
அதிலேற்றிய கோபுரத்திலகம் அழகா!
பெண்ணுலகம் பிரமிக்கும் உன் பேரழகா!

எழுதியவர் : சகா (11-Apr-19, 2:26 pm)
சேர்த்தது : சகா
Tanglish : ethu alagu
பார்வை : 2062

மேலே