சகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சகா
இடம்
பிறந்த தேதி :  16-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Mar-2019
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  9

என் படைப்புகள்
சகா செய்திகள்
சகா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2019 7:37 pm

உயிரானவளே...

உன்னுடன் நானா பேசி சிரிக்கும்
ஒவ்வொரு நாளும்...

எனக்குள் கோடி இன்பங்கள்
சொல்ல முடியாமல்...

கைபேசியை வைக்கிறேன் என்று
சொல்லும் ஒவ்வொரு முறையும்...

இன்னும் கொஞ்ச நேரம்
பேச நினைக்குதடி என் உள்ளம்...

வைக்க மனமில்லாமல்
வைக்கிறேன்...

நான் அனைத்துவிட்ட
என் கைபேசியை...

பார்த்து கொண்டே
இருக்கிறேன் இமைக்காமல்...

என்னையே அறியாமல்
சில நாட்களில்...

முத்த மழை பொழிகிறேனடி
என் கைபேசிக்கு...

மீண்டும் உன்னிடம் நான்
எப்போது பேசுவேனென்று...

தவிக்குதடி
குட்டி என் இதயம்...

உயிரானவளே
வாழ்கிறேன் உன் நினைவில்.....

மேலும்

அருமையான கவிதை, அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் 23-Apr-2019 11:26 am
இது யாரை நினைத்து எழுதிய கவிதை சொல் முடியுமா கவிதை அருமை 17-Apr-2019 4:45 am
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே. 13-Apr-2019 6:45 pm
பிரிவே உண்மை கூறும் urakal 11-Apr-2019 9:14 pm
சகா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2019 11:48 am

தினம் பௌர்ணமி படர்ந்த உன் வாநுதலில் இன்று மட்டும் வால்மீன்

வெண்ணிலா விண்மீன் ஆனதோ!!

மேலும்

சகா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2019 2:32 pm

பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமாம்
-பழமொழி
பஞ்சு உடல் பெண்ணழகி பக்கத்துல நீ இருக்க பாவி மனம் மட்டும் எரிவதேனோ

மேலும்

சகா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2019 2:26 pm

பார்த்த உடன் மயக்கும் மங்கை உந்தன் முகம் அழகா!
மாசில்லா மழலை மனம் அழகா!
கார்மேகக் குயில் கருங்கூந்தல் அழகா!
வளைமதி வந்தொன்றிய வானவில் நுதல் அழகா!
அதிலேற்றிய கோபுரத்திலகம் அழகா!
பெண்ணுலகம் பிரமிக்கும் உன் பேரழகா!

மேலும்

சகா - அகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2019 10:07 am

தாய் தந்தை
சொந்த பந்தம் தவிர
யாரையும் நேசித்தவளில்லை

காதலில் நுழையலாமா
என யோசிக்கையிலேயே
கல்யாணம் கட்டிக் கொன்டேன்

இந்த கனமாவது
செல்லித்தொலையேன்
நான் உன்னைக்
காதலிக்கிறேன் என்று

அகிலா

மேலும்

நன்றி சகோ 21-Apr-2019 6:41 pm
நல்ல கவித்துவமான படைப்பு ... . 14-Apr-2019 11:52 pm
நன்றி சகோ 11-Apr-2019 2:59 pm
அருமை... 11-Apr-2019 2:11 pm
சகா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2019 1:53 pm

சாதி பாத்து, சாதகம் பாத்து
வேலை பார்த்து, சம்பளம் பார்த்து
வீடு பார்த்து, வசதி பார்த்து
பணம் பார்த்து, பவுன் பார்த்து
சொத்து பார்த்து, சொகுசு பார்த்து
அழகு பார்த்து........... எல்லாம் பார்த்து
.
.
.
கடைசியில திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, ஆண்டவன் போட்ட முடிச்சு...
சொர்க்கம் என்ன சாதியிலும் ஜோசியர் வார்த்தையிலுமா இருக்கிறது...
இதில் சாமி எங்கே வந்தது...

மேலும்

சகா - சகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2019 4:55 pm

பெண்ணே இப்பூவுலகின் பிரம்மனே!
உயிர் படைக்கும் உன்னால் இயலாதது உண்டோ...!
சோதனை கண்டு சோர்வுராதே சாதனை படைக்கும் வரை சலித்துவிடாதே...
தும்பியறியா தன் பலம் போல் உன் திறமை நீ அறியோடி...!
தென்றலே உன் வலிமை கொண்டு வீருநடை போடடி!
ஏளனம் செய்வோரை ஏறி நீ செல்லடி,
ஓர் நாள் உன்னை பார் போற்றும் பாரடி...!!
போராடு பெண்ணே....

மேலும்

எண்ணங்களை வரிகளில் எழுதுபவரை இந்த ஊரில் எழுத்தாளன் என்றுதான் சொல்லுவார்கள்; எனவே நீங்களும் எழுத்தாளர் 26-Mar-2019 4:11 pm
நான் கவிஞன் அல்ல சகோ... எனது எண்ணங்களை வரிகளில் எழுதுகிறேன்... 26-Mar-2019 1:43 pm
உங்களின் படைப்பு பாட்டு வரிகளில் இருக்கிறது; பாட்டு வடிவில் இல்லை. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். 26-Mar-2019 1:06 pm
சகா - சகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2019 4:49 pm

வானுயர் வல்ல பெருமை நீக்கி,
மானுடம் பூண்டு மண்ணுலகம் வந்து,
என் சிந்தையில் நித்தம் இன்பம் தந்து,
என்னுயிரில் தன்னுயிர் தந்து-எனை
ஆட்கொண்ட அரும்பெரும் உறவே!!!
இதயத்தில் கருவாய் சுமந்து நான் பெற்ற என் மகளுக்கு
மகளிர் தினவாழ்த்துக்கள்...

மேலும்

நன்றி ஆரோ 26-Mar-2019 1:41 pm
உங்கள் மகளுக்கான தந்தையின் வாழ்த்து நன்றாக இருக்கிறது. 26-Mar-2019 1:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே