ஏங்கி தவிக்குதடி என் உள்ளம் 555

உயிரானவளே...


உன்னுடன் நானா பேசி
சிரிக்கும்
ஒவ்வொரு நாளும்...


எனக்குள் கோடி இன்பங்கள்

சொல்ல முடியாமல்...


கைபேசியை வைக்கிறேன் என்று

சொல்லும் ஒவ்வொரு முறையும்...


இன்னும் கொஞ்ச நேரம்

பேச நினைக்குதடி என் உள்ளம்...


வைக்க மனமில்லாமல்

வைக்கிறேன்...


நான் அனைத்துவிட்ட

என் கைபேசியை...


பார்த்து கொண்டே

இருக்கிறேன் இமைக்காமல்...


என்னையே அறியாமல்

சில நாட்களில்...


முத்த மழை பொழிகிறேனடி

என் கைபேசிக்கு...


மீண்டும் உன்னிடம்
நான்
எப்போது பேசுவேனென்று...


தவிக்குதடி
குட்டி
என் இதயம்...


உயிரானவளே

வாழ்கிறேன் உன் நினைவில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Apr-19, 7:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2296

மேலே