தற்காலத்திலோ
என்னிடம் உள்ளது எண்ணிலடங்க பொருட்கள்
அத்தனையும் அனைத்தையும் சரி செய்யும்
விற்பனைக்குக் கொடுக்க மாட்டேன் பிறர்
வினைத் தீர்க்க ஈயமாட்டேன்
பொதுச் சேவை புரியவே புது அவதாரம் எடுத்ததாய்
போகும் இடமெல்லாம் தற்புகழேப் பேசுவேன்
எவரிடமாவது உள்ள குணசீலத்தைக் கூட
கூடாது என உரைத்துக் குறைச் சொல்லால் சாடுவேன்
குறு குறுக்கும் கூட்டத்தில் கும்பிடும் பொருளாக மாறி
குதுகலத்தை உருவாக்கி கோடியில் தேற்றுவேன்
அரசர் காலத்தில் நான் அனைவருக்கும் ஆலோசகன்
தற்காலத்திலோ தரணி புகழும் அரசியல்வாதி.
- - - நன்னாடன்.