பைத்தியநாதன்
ஏன்டப்பா வடக்கிருந்து ஊருக்கு வந்திருக்கிற பேரப் பையா, உம் பேர 'பைத்தியநாதன்'னு மாத்திட்டயாமே?
@@@@@
ஆமாம், நீங்க தாத்தா பேர வைத்தியநாதன்னு எனக்கு வச்சீங்க. கல்கத்தாவில எனக்கு நிரந்தர வேலை. நல்ல சம்பளம். அங்க வங்காள மொழி பேசறாங்க. வங்காளிங்க வைத்தியநாதன்ங்கிற பேர 'பைத்தியநாத்'னு தான் உச்சரிப்பா. அந்த ஊருக்குத் தகுந்த மாதிரி எம் பேர பைத்யநாத்னு சட்டப்பூர்வமா மாத்திட்டேன் பாட்டிம்மா.
@@@@
நம்ம ஊருக்காரங்க எல்லாம் உம் பேரனுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? அழகான அவனோ தாத்தா பேர பைத்தியநாதன்னு மாத்தி வச்சிட்டிருக்கிறான்னு நக்கலப் பேசறாங்கடா வைத்தி.
@@@@
பேசீட்டுப் போறாங்க பாட்டி. அவுங்களா எனக்குப் படியளக்கறாங்க?