இசை

இசை



இசை

இதயத்துடிப்பின்

இன்னுமொரு பரிணாமம்....



இசை

சப்தங்களின் பரிமாணம்...



இசை

ஸ்வரங்களின் சுவாரஸ்யம்...



இசை

வார்த்தைகளின் வாழ்க்கை...



இசை

மொழிகளின் முன்னோடி...



இசை

இரவுகளின் நாயகன்...



இசை

வலிகளில் கண்ணீர்...



இசை

சந்தோஷத்தில் உச்சம்...



இசை

ஏமாற்றத்தில் எதிர்மறை...



இசை

துரோகத்தில் துயரம்...



இசை

நம்பிக்கையில் நண்பன்...



இசை

பயணத்தில் சகபயணி...



இசை

தூரத்தில் நிலவு...



இசை

அருகில் அம்மா...



இசை

காதலின் வேர்...



இசை

காமத்தின் நீர்...



இசை

உறவுகளின் உன்னதம்...



இசை

நட்புகளின் நாடி ...



இசை

தீரா பானம்...



இசை

குறையா செல்வம்...



இசை

மகிழ்ச்சியின் ஊற்று...



இசை

கற்பனைகளின் கால்தடம்...



இசை

கடவுளின் காவல்...



இசை

குழந்தையின் குதூகலம்...



இசை

இளைஞர்களின் இதயம்...



இசை

முதியோரின் மூச்சு...



இசை

இறந்தவனின் இரங்கட்பா...



இசை

இயற்கையின் அதிசயம்...



இசை

மனிதனின் மனிதம்...



இசை

மாக்களின் மாண்பு...



இசை

காற்றின் கருப்பை...



இசை

தென்றலின் தீண்டல்...



இசை

ஒளியில் தீபம்...



இசை

இருளில் காமம்...



இசை

கடல் நீர்...



இசை

ஆகாய நீளம்...



இசை

மின்னலின் கீற்று...



இசை

இடியின் மடி...



இசை

வர்ணங்களில் வானவில்...



இசை

கைகுழந்தையின் பால்முகம்...



இசை

மனதின் கண்ணாடி...



இசை

மாற்றத்தின் முன்னோடி...



இசை

திசையறியா ஓசை...



இசை

நடனத்தின் ஒரு கால்...



இசை

அன்னியர்க்கும் அனிச்சைச்செயல்...



இசை

மெட்டுக்களின் மேனி...



இசை

சந்தங்களின் சந்தர்ப்பம்...



இசை

பல்லவியின் பாவம்...



இசை

சரணத்தின் சங்கமம்...



இசை

கோவிலின் மணியோசை...



இசையின்றி ஏதுமில்லை

இசையிலே யாவுமுண்டு...



- வருண் மகிழன்

எழுதியவர் : வருண் மகிழன் (12-Apr-19, 7:59 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : isai
பார்வை : 4210

மேலே