விவசாயம்

மாடும் மனுசனும் சேர்ந்து
செய்த
விவசாயம் காணாது போச்சு
இயந்திரங்கள் இப்போ முதல்
ஆகிப்போச்சு
கஞ்சி களயம் சுமந்த
பெண்கள்
காணாது போச்சி கிராமத்து
பெண்கள்
நடை உடை பாவனையும்
மாறிப்போச்சி
விவசாய நிலமெல்லாம் வீடா
போச்சி
கொஞ்சம் விவசாயி எண்ணிக்க குறைச்சலாச்சி
இருப்பதில் இப்போ பாதி
கடங்காரனாச்சி
மீதி விவசாயியின் நிலையோ
நீரில்லா
பயிராகிப் போச்சி..,