பாவம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
உங்கள்
இறப்பு நாட்கள் நீட்டிக்கப்படும்
வாக்குக்காக வாக்குறுதிகளாக
ஆட்சி
அதிகாரம் வேண்டி காற்றில்
கலந்து போகும் முழக்கங்கள்
ஒவ்வொரு தேர்தலிலும் இது
வழக்கம்
இம்முறை எமதர்மன் எனக்கே
போட்டியா என்று பொறாமையில்
இவரைத்
தேர்தெடுத்துக் கொண்டான்
பாவம்..,

