ரேனுஸ்ரீ - பகுதி 8

அனைவருக்கும் வணக்கம்.
காலதாமதத்திற்காக மன்னிக்கவும்.....

ரேனுஸ்ரீ-8
மறுநாள் காலை பள்ளிக்கு சென்று பையை வைத்து விட்டு பிரேயர்க்கு சென்று நின்றேன்,என் மனம் ஸ்ரீயை தேட தொடங்கியது,அன்று திங்கள் கிழமை என்பதால் அனைத்து மாணவன்களும் பள்ளி சீருடையில்(வெள்ளை சட்டை,காக்கி நிக்கர்)ஒரே போல தெரிந்தனர்,ஆனால் ஸ்ரீ மிக எளிதாக என் கண்களில் சிக்கிக்கொண்டான்,அத்தனை பேரின் மத்தியிலும் அவன் மட்டும் தனியாக தெரிந்தான்.

என்னை போன்று அவனும் தேடல் கொண்டிருந்தான்.
இருவரின் கண்கள் சந்தித்த போது அவன் தேடல் நின்றது,
அவன் தேடியது எனை என்று புரிந்தது.
புன்னகையை ஒளித்திட முடியாமல் என் முகத்தினை
ஒளித்துக்கொண்டேன்!தோழியின் பின்னால்.

எப்படி இருப்பினும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும்,தேசிய கீதத்திற்கும் கொடுக்க வேண்டிய மரியாதையில் சிறு குறையும் இடவில்லை இருவரும்.

பிரேயர் முடிந்து வகுப்பிற்கு சென்ற பிறகு ஸ்ரீக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த வாழ்த்து அட்டையை பானு இடம் கொடுத்து ஸ்ரீ இடம் கொடுக்கும்மாறு கூறினேன்.
அவளும் புன்னகைத்தபடி வாங்கிக்கொண்டாள்.

மறுநாள் காலை சீக்கிரமாக பள்ளிக்கு சென்றேன்,பள்ளிக்குள் நுழையும் போதே ஸ்ரீயின் வகுப்பறையை பார்த்தபடி நுழைந்தேன்,ஸ்ரீயும் அவன் நண்பர்களும் வகுப்பறைக்குள் நுழைவதற்கு உதவியாக இருக்கும் இரண்டு படிக்கெட்டுகளில் உட்கார்த்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீ நீள நிற ஷிர்ட்டும் ,வெள்ளை நிற பேண்ட்டும் அணிந்திருந்தான்,முதன் முறையாக அவனை பின்புறத்தில் இருந்து பார்த்தபோது எந்த உடையை அணிந்திருந்தானோ அதே உடையை அணிந்திருந்தான்,அவனுக்கு அந்த உடை மிக பொருத்தமாக இருந்தது.
அவனை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது,அவனது குரலை கேட்க வேண்டும்,அவனது சிரிப்பை அருகில் இருந்து காண வேண்டும் என்று மனம் ஏங்கியது,அவனை பார்த்தபடி வகுப்பை நோக்கி சென்று கொண்டிருந்தேன்,அவன் திடீர் என என்னை பார்த்ததும் என்ன செய்வது என்று புரியாமல் அவனை பார்க்காதது போல வகுப்பிற்குள் சென்றுவிட்டேன்.
வகுப்பிற்குள் வந்த பிறகு அவனை மீண்டும் காண மனம் விரும்பியது.
நேரடியாக அவனை சென்று காணமுடியாது,அது சரியாக இருக்காது என்று தோன்றியது,என் வகுப்பிற்க்கு வெளியே பானு அவள் நண்பர்களோடு ஐந்து கற்கள் விளையாட்டை விளையாடி கொண்டிருந்தால்,பானுவிடம் பேசுவது போல ஸ்ரீ பார்காதபோது அவனை பார்த்து மகிழ்ந்தேன்.
ஆமா இன்னைக்கு என்ன சீக்கிரமா வந்துட்ட?என்றால் பானு.
சும்மாத்தா...என்று கூறினேன்
நீ கொடுத்த கிரீட்டிங் கார்ட ஸ்ரீ அண்ணா கிட்ட கொடுத்துட்டா,அவரு உன் கிட்ட தேங்க்ஸ் சொல்ல சொன்னாரு என்றால்.
ம்ம்...என்று கூறி ஸ்ரீயை பார்த்தபடி தலையை ஆட்டினேன்.
அன்று மாலை பள்ளி முடிந்து நானும் பானுவும் பேசிக்கொண்டே பள்ளியை விட்டு வெளியே வந்தோம்,ஸ்ரீ ஒரு சிறுவனை சைக்கிளில் உட்கார வைத்து செல்ல இருந்தான்,ஸ்ரீயை பார்த்த பானு "அண்ணா !"என்று அழைத்தால்.

எங்களின் வருகையை பார்த்த ஸ்ரீ " புன்னகித்தான்".

பானு அந்த சிறுவனை பார்த்து என்னடா fever சரி ஆயிடுச்சா என்று கேட்டால்.

அதற்க்கு அவன் புன்னகித்தபடி தலையை ஆட்டினான்.

ஸ்ரீ அண்ணாவோட தம்பி கோபி,என்று சிறுவனை காட்டி அறிமுகப்படுத்தினால் பானு,நான் அந்த சிறுவனை பார்த்து புன்னகித்தேன்,அவனும் என்னை பார்த்து புன்னகித்தான்.

சரி,என்று கூறி பானுவை பார்த்து தலையை ஆட்டிவிட்டு,என்னை அக்கறையோடு ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான் ஸ்ரீ.

அவனுடைய பார்வை 'பத்திரமாக வீட்டிற்கு செல்'என்று கூறியது போல இருந்தது.

அதன் பிறகு ஸ்ரீயின் காரணமாக பள்ளிக்கு சீக்கிரமாக வர ஆரம்பித்தேன்,prayer பெல் அடிக்கும் வரை என் நண்பர்களுடன் பேசிக்கொண்டும்,விளையாடிக்கொண்டும் ஸ்ரீயை திருட்டுத்தனமாக பார்த்தபடி இருப்பேன்,ஸ்ரீயும் அவன் நண்பர்களோடு பேசிக்கொண்டே என்னை பார்ப்பதை கண்டிருக்கிறேன்,ஸ்ரீயினால் எனக்கும்,பானுவுக்கும் இடையில் நட்பு அதிகரித்தது,நண்பர்கள் அதிகரிக்க தொடங்கினர்,நண்பர்களுடன் சேர்ந்து பேசி ,விளையாடி, பாடம் கற்று ,கற்பித்து பள்ளி வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தேன்.

அவன் என் வாழ்க்கையில் வந்த பிறகு நாட்கள் மிக வேகமாக நகர தொடங்கியது,அனால் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஒரு யுகமாய் கழிந்தன,இனித்திட்ட அரசு விடுமுறைகள் எல்லாம் வேண்டாத நாட்களாய் மாறிபோயின.

அவனை எத்தனை முறை கண்டாலும் மீண்டும் மீண்டும் காணவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது,அவனை கண்ட நாள் முதல் அவனிடம் பேசியதுகூட இல்லை இருப்பினும் நாளுக்கு நாள் அவன் மீது அன்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.

இப்படி நாட்கள் செல்கையில் திடீர் என ஒரு நாள் ஸ்ரீயும் அவன் வகுப்பு தோழர்களும் எங்கள் பக்கத்து வகுப்பான எட்டாம் வகுப்பிற்கு வந்து அமர்ந்தனர்,எட்டாம் வகுப்பு "சி" பிரிவும் "எ" பிரிவும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
நானும் பானுவும் ஒருவரை ஒருவர் கேள்வி குறியோடு பார்த்து கொண்டோம்.

அதன் பிறகு பக்கத்து வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்,ஸ்ரீ பொறுப்பாக பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தான்,நானோ ஸ்ரீயை கவனித்துக்கொண்டிருந்தேன்.எங்கள் ஆசிரியர் படிக்க கூறி விட்டு உட்கார்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார்.

உணவு இடைவேளையின் போது பானு ஸ்ரீயிடம் பேசிவிட்டு வந்து என்னிடம்,"ஸ்ரீ அண்ணாவோட கிளாஸ் டீச்சர் லீவ் ல இருக்காரா,இன்னொ ரெண்டு நாளைக்கு இங்கதா இருப்பாங்களா"என்று கூறினால்.
அவள் கூறியதை கேட்டு என் உள் அப்படி ஒரு ஆனந்தம் ஏற்பட்டது.
பிரேயரின் போதும்,உணவு இடைவேளையின் போதும்,பள்ளி முடிந்த பிறகும் தான் தூரத்தில் இருந்து ஸ்ரீயை காண முடியும்,சில சமயங்களில் பார்க்க முடியாமல் போவதும் உண்டு,ஆனால் இப்பொழுது இன்னும் இரண்டு நாட்களுக்கு அவனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்து புன்னகைத்தேன்.

யாரோ ரொம்ப சந்தோஷ படுற மாரி தெரியுது!
ம்ம்ம்....இன்னொருத்தர் முகத்துல கூட சந்தோஷத்த பார்த்த என்று கூறி சிரித்தால் பானு.

அந்த மூன்று நாட்கள் மிக மகிழ்ச்சியாக சென்றது.
நானும் ஸ்ரீயும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம்,சில சமயங்களில் இருவரும் ஒரே சமயத்தில் பார்த்துக்கொண்டு புன்னகைத்தபடி வேறு திசைகளில் தலையை திருப்பி கொள்வோம்.
எனக்கும் ஸ்ரீக்கும் இடையில் வெறும் மூன்று மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது,
ஸ்ரீ பேசுவதை,சிரிப்பதை,விளையாடுவதை,படிப்பதை, உணவருந்துவதை அனைத்தையும் அருகில் இருந்து காண முடிந்தது,அது மட்டுமின்றி என்னுடைய முழு பெயர் ஸ்ரீக்கு தெரிய வந்தது.

அட்டெண்டன்ஸின் போது ஆசிரியர் மாணவர்களின் முழு பெயரை கூறி அழைப்பது வழக்கமாகும்,அப்படி ஒரு ஒரு பெயராக கூறி கொண்டிருக்கையில் நான் ஸ்ரீயை பார்த்தேன் ஸ்ரீ படித்துக்கொண்டே அவ்வபோது என்னை பார்த்து கொண்டிருந்தான்,ஸ்ரீயை பார்த்த படி என் முன்பாக அமர்ந்திருந்த பானுவின் அருகே சென்று "ஸ்ரீ அவருக்கு என்னோட full நேம் தெரியுமா ?"என்று கேட்டேன்
அவள் மூச்சை இழுத்து விட்டபடி "தெரியாது,அட்டெண்டன்ஸ் எடுக்கும் போதுதா உன்னோட முழு பெயரே எனக்கு நியாபத்துக்கு வருது அப்படி இருக்கும் போது எங்க சொல்றது,ஆனா உன்னோட பெற கேக்கும் போது அவரோட ரியாக்ஷன் எப்படி இருக்குனு நா பாக்கணு"என்று ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தால்.
"ஜி.ரேனுஸ்ரீ" என்று கோபத்தோடு சத்தமாக என் பெயரை கூறி அழைத்தார் ஆசிரியர்.
ப....பிரே..ப்ரெசென்ட் சார் என்று கூறினேன்.
அவர் என்னை முறைத்த படி சலித்து கொண்டே தலையை ஆட்டிவிட்டு அடுத்த பெயரை அழைக்க தொடங்கினார்.
ஐயோ ஸ்ரீ என்று மனதில் நினைத்த படி ஸ்ரீயை பார்த்தேன்,ஸ்ரீ என்னை பார்த்தபடி இருந்தான்,ஸ்ரீயின் முகத்தில் அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி இரண்டையும் காண முடிந்தது,பிறகு அவன் பார்வை பானுவின் பக்கம் திரும்பியது,பானு ஸ்ரீயை பார்த்து அசட்டு தனமாக சிரித்தபடி என்னிடம் "எதுக்கு முன்னாடியே சொல்லலன்ர மாறியே பாக்குறாரு"என்றால்.
நான் பானுவை பார்த்து புன்னகித்தேன்.

மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ரீயின் ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் வகுப்பிற்கு வருமாறு அழைத்தார்,ஸ்ரீ வகுப்பை விட்டு செல்வதற்கு முன் என்னை நின்று பார்த்து விட்டு பிரிய மனம் மின்றி வகுப்பை விட்டு அவனுடைய வகுப்பிற்கு சென்றான்.
அவனுடைய பார்வை என் தந்தையை நினைவூட்டியது,சிறு வயதில் என்னை பள்ளியில் சேர்த்து விட்டு பிரிய மனமின்றி தவித்து பார்த்தபடி சென்றார்.
அந்த நிமிடம் ஸ்ரீ சென்றுவிட்டான் என்ற கவலையை விட,என் தந்தையை காண வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது.

அதன் பிறகு ஸ்ரீயும்,அவனுடைய நெருங்கிய இரு நண்பர்களும் உணவு இடைவேளையின் போது எங்கள் பக்கத்து வகுப்பில் உள்ள அவர்களுடைய நண்பனை காண வந்துவிடுவர்.
சில சமயங்களில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்று விடுவர்.
ஸ்ரீ பள்ளியில் இருக்கிறான் என்ற உணர்வு,என் தாய் தந்தையருடன் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

திடீர் என ஒரு நாள் காலை ...

தொடரும்....

எழுதியவர் : anuranjani (17-Apr-19, 11:58 pm)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 288

மேலே