கம்முன்னா பதக்கா

அடியே பட்டணத்துக்காரி
ஆருக்கு நீ சொந்தக்காரி
@@@
பாட்டி, பட்டிக்காட்டுப்பாட்டி
வந்தவுடன் கேள்வி கேட்டு
வதக்குறயே பாட்டி
@@@@
என்னடி சொல்லிவிட்டேன் இப்போ
நாங் கேள்வி கேட்டது தப்போ?
சொல்லடி உன் பதிலை இப்போ
அப்பத்தான் என் ஆவல் தீரும்
@@@
புளிய மரத்து வீட்டு மாரிமுத்து தாத்தா
அவரோட மகளோட பேத்தி.
@@@@
ஓ...அப்படியா சொல்லற கண்ணு
நீ தான்டி நாங் கண்ட அழகான பொண்ணு!
மறக்காம சொல்லுடி உம் பேர செல்லம்
அதக் கேட்டு மகிழவேண்டும் என் உள்ளம்.
@@@@
பாட்டி பாட்டி பட்டிக்காட்டுப் பாட்டி
எம் பேரு அழகான பேரு
இந்த ஊரு இதுவரை அறியாத பேரு
கம்னா பதக் என் அருமையான பேரு.
@@@@
கம்முன்னா பதக்கா? 'வா'ன்னா பதக்கா?
அடிபோடி அழகான பொண்ணு
இதெல்லாம் பேருன்னு யார் உனக்கு வச்சது?

@ @@@@

எழுதியவர் : மலர் (20-Apr-19, 8:25 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 20
மேலே