ஆறாம் அறிவு

ஆதாம்ஏவாளுக்கு இட்டக் கட்டளை
ஒரு மரத்து பழம் மட்டும்
புசித்தல் கூடாதென்று
நல்லது கெட்டதை அறியும் பழம்
அதை புசிக்க ஏன் தடை
ஆறாம் அறிவு பகுத்தறிவு என்பதால்
தானே மனிதன் என்று ஆனான்
மறைத்தல் தோன்றியா பிறகு தானே
விலக்கி பார்த்தல் தோன்றியிருக்கும்
புசிக்காதிருந்திருந்தால் பகுத்தறிவு
தோன்றியிருக்குமா
விலங்காய் மனிதஇனம் நன்றாக தான்
இருந்திருக்கும்
மூடியதும் இருந்திருக்காது திறந்து பார்க்கும்
எண்ணமும் தோன்றியிருக்காது..,