வெ ஜெயபாலன்
நீ முத்தியால்பேட்டையில்
பூத்த முத்து
இலட்சுமி அம்மாள்
தமிழுக்குத் தாரை
வார்த்த சொத்து
நீ வீணான பொருட்களை
விற்று விண்ணானவர்
உங்கள் புத்தகமும்
புத்தகமும் அழகு
நீ
மதுவின் கொடுமை
கண்டு கொதிக்கும் பனித்துளி
எழுபது
வயதிலும் இனிக்கிறது
உன் காதல் மொழி
வெள்ளாடை அணிபவன்
யாரையும் வெள்ளாடாய்
நினையாதவர்
நீ வெங்கடாசலத்தின்
தலைமகன்
வெங்கட்டாநகரின்
கலைமகன்
உன் மெய்
எப்பொழுதும் பேசுவது
உண்மை
உன் கை எல்லோர்க்கும்
வீசுவது நன்மை
பணியில் திறமை
செயலில் நேர்மை
அமைதி உன் தன்மை
அதுவே உன் மேன்மை
உன்னுள் இதனை மை
கண்டு சிலிர்க்கின்றது என் மெய்
முப்பால் என்றால் அது
வள்ளுவர்
ஜெயபால் என்றால் அவர்
நாவலில்
வல்லவர்
அறத்துப்பாலை தாய்ப்பாலாய்க்
குடித்து வளர்ந்த பால்தான்
ஜெயபால்
நீ அனைவருக்கும்
கொடுக்கும் பூ அன்பு
அனைவரும் உங்களுக்கு
கொடுக்கும் பூ மதிப்பு
உன் நாவில்
இருக்கிறது
நாவல்
அதனால் இனிக்கிறது
நீ எழுதும் நாவல்
உன் தூவல்
எழுதிய நாவல்
நாவலல்ல நாவல்
படிப்போர்க்கு அது தரும் ஆவல்
அது மது குடிப்போர்க்குக் காவல்
அறியாமை இருளில்
உறங்குவோரை எழுப்பும் சேவல்
தப்பு செய்வோரை மாற்றும் ஏவல்
காந்தி பிறந்த மாதம்
நீ பிறந்தாய்
காந்தி வீதியில்
உழைப்பால்
காந்தி வீதியில்
கொடிகட்டி பறந்தாய்
நாவல் ஆசானே
நீ நூறாண்டும்
ஊராண்டும்
பாராண்டும் வாழ
அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்