நான் உழைப்பாளி

நான் உழைப்பாளி

முதலாளிகளே
உழைப்பாளர் தினம்
மே 1
என்பதால்
ஒரு நாள் மட்டும்
எங்களைக் கொண்டாடுகிறீர்

எங்கள்
வேர்வையில்
வெற்றி
வேர்வைப்பதைவிட
வயிற்றில்
வெற்றிடமே
அதிக வேர்வைக்கிறது

நான்
உழைத்துக்
களைப்பேன்
யாரையும்
கலைக்க
உழைக்கமாட்டேன்

என் உழைப்பை
ஊதவே அனைவரும்
வருகின்றனர்
ஊதியத்தை ஊதி
உதவ
யாரும் வருவதில்லை

பலம் உள்ளவன்
வேலைக்கு வருகிறான்
கையொப்பமிட்டு
உடனே செல்கிறான்

அவன் குடும்பதிற்கும்
சேர்த்து நான்
சோறு போடுகிறேன்

கொசு ரத்தம்
உறிஞ்சுவதுபோல்
சலுகை ஊதியம்
இல்லாமல்
என் உழைப்பு
அரசால் உறியப்படுகிறது

தண்ணீரால்
விளைந்த நெல்லைவிட
என் கண்ணீரால்
விளைந்த நெல்லே அதிகம்

வேர்விட்டு
வளர்ந்த விதைகளைவிட
என் வேர்வை பட்டு
வளர்ந்த விதைகளே அதிகம்

ஏப்ரல் 1 ல்
முட்டாள்கள் தினம்
மே 1 ல்
எங்களுக்கு தினம்
வரிசை என்னவோ
சரிதான்
எங்கள் நிலையை
யாரும் செய்யவில்லை
சரிதான்

நாங்கள்
பனியிலும்
பணிந்து
பணியாற்றுவோம்

உழைக்கும்
எங்கள் கரங்கள்
கரங்கள் அல்ல
கருங்கல்
அவை
தேசியக்கொடியின்
சக்கரங்கள்

எங்கள் வாழ்க்கையை
தங்கிப்பிடிக்கத்தான்
கம்பம் போன்ற
தலைவர்கள் இல்லை

இருக்கும்
தலைவர்கள் எல்லாம்
அரசிற்கு
தலை வணங்கி
தன் வேலையை
முடிக்கின்றனர்

அரசே
தினங்களைக்
கொண்டாடுவதை விட்டுவிட்டு
எப்போது
எங்களைக் கொண்டாடுகிறீரோ
அன்றே எங்களுக்கு
உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : புதுவைக் குமார் (26-Apr-19, 10:20 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : naan uzhaippaali
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே