காதல்
பெண்ணே உன் பார்வையில்
மலரின் மென்மைக் கண்டேன்
நீ மலர்விழி அதனால், அதில்
மருட்சியும் கண்டேன் மான்விழியானாய்
உன்விழிகள்தும்போது கயல்விலியானாய்
கோபத்தில் சுட்டெரிக்கும் பெண்ணே
நீ வேல்விழியாளானாய் , ஆனால் உன்
கண்ணில் என்னைக்கவர்ந்தது அதில்
ஓரத்தில் நீ தேக்கிவைத்து பார்வையில்
காட்டும் பெண்ணிற்கே உரித்தான அன்பு
அன்பு விழியாலடி நீ என்னை அதனால்
ஆளவந்தவளாடி நீ