கிராமத்தில் மலர்ந்த காதல்

நதியில் தலை மூழ்கி குளித்து
நனைந்த ஆறடிக் கூந்தலைக் விரல்களால்
கோதிவிட்டு அது காற்றில் ஆற
அழகிய கொண்டையாய்ப் பின்னி
நதியோரம் பூத்திருந்த செவ்வரளியைத்
தலையில் வைத்து இளமையில் பூத்துக்குலுங்கும்
அங்கத்தின் அழகை எல்லாம் புதுச்சேலையில்
கட்டி மறைத்து நெற்றியில் குங்குமப்பொட்டு
இட்டு அன்ன நடைபோட்டு வந்தாள்
நதிக் கரை வந்தடைந்தாள் அங்கு அவள்
அவள் வரவிற்கு காத்திருந்த மாமன்
மகனைக் கண்டாள் புன்முறுவல் தந்தாள்
நாணி தலை குனிந்து மண்ணில் கால்
விரலால் கோலமிட்டாள் அது அவன் மனதில்
காதல் ரங்கோலியாய் வந்தமர்ந்ததோ
நதிக் கரை வந்தடைந்த சொந்தத்திற்கு
கரையேத்த வந்தான் அவன் வாழ்க்கையில்
அவளைக் கைபிடித்து மனைவியாய் ஏற்று.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-May-19, 4:49 pm)
பார்வை : 290

மேலே