நவீன கோழி ஊன் உணவோ

புலனடக்கம் பேண பொது வெளியில் போட்டி
சமமாய் எவரையும் பார்க்க சரித்திர கலை நிகழ்ச்சி
உணவு புசிப்பதுக் கூட உடலை உரமாக்கும் வளர்ச்சி
நடந்தே ஓடைச் சென்று உடலை குளிப்பாட்ட வேணும்

நாற்பதாண்டுக்கு முன்பு இது எல்லாம் தமிழர் வழக்கு
ஈனம் மானம் வெட்கம் கூச்சம் மரியாதை எல்லாம்
கூடவே பிறந்ததாய் எண்ணி சுற்றத்தினர் வாழ்ந்தனரே
குதுகலம் அடைந்து அடைத்து கூடி மகிழ்ந்தனரே

பயிரில் பெரிய மாற்றம் உடலில் பிணியை சேர்க்க
நவீன கோழி ஊன் உணவோ கோளாறாய் சூடை ஏற்ற
கோதுமை மைதா மாவும் நஞ்சை தாங்கி உலாவ
பணிசெல்லும் ஆடவர் பெண்டிரெல்லாம் அதையே உண்டு மகிழ

அடுத்து பொறிந்த சந்தததி அதனையே பெரிதாய் விரும்ப
அச்சம் மடம் நாணம் அத்தனையும் விட்டு விலக
குற்றம் செய்வது என்பது சடுகுடு விளையாட்டாய் மாற
குறை காண முடியாத நிலையில் கோள பூமி சுழல்கிறதே.
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (2-May-19, 6:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 48

மேலே