பாலைவனப்புரம்

முன்னுரை
குண்டு வைத்து உயிர்களை அழிப்பது மட்டுமே பயங்கரவாதம் இல்லை. பயங்கரவாதத்துக்குப் பல முகங்கள் உண்டு. மதம், மொழி. அரசியல். இனம், பொருளாதராம் போன்று நீண்ட பட்டியல் உண்டு . இறைவன் தந்த சூழலலை அழிப்பது மிகப் பெரிய பயங்கரவாதம் அதுவும் சூழல் பயங்கரவாதம் ஒரு சோலைவனத்தை பாலைவனமாக்கி விட்டால் ?

நான் ஒரு தாவரவியல் பட்டதாரி என் அம்மா அடிக்கடி எல்லோருக்கும் பெருமையாகச் சொல்லுவாள் என் மகன் “வேம்பரசன்” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எதை நட்டாலும் அது பூத்து, சொரிந்து ,காய்க்கும் என்று . என் அப்பா ஒரு விவசாயி, அவர் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு வேப்ப மரத்தை நான் பிறந்த தினமன்று நிழல் தருமென்று நட்டார் அதனால் எனக்கு அந்த பெயரை என் அப்பா வைத்தார் என்று அம்மா சொல்லுவாள் .
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரங்கள் எல்லாம் நான் நட்டவை . அவைக்கு உரம் போட்டு, தண்ணீர் விட்டு கவனிப்பது என் பொறுப்பு. ஒரே ரோஜாச் செடியில் பல வர்ண ரோஜாச் செடிகளை ஓட்ட வைத்து, பல வர்ணப் பூக்களை மலர வைத்திருக்கிறேன். யாராவது மரங்களின் கொபுகளை வெட்டுவது எனக்குப் பிடிக்காது. நான் மரங்களைத் தெய்வமாக மதிப்பவன் . மரத்தின் கீழ் இருந்து புத்தர் போன்ற பலர் தியானம் செய்து முக்தி அடைந்துள்ளனர்

நான் சுற்றுச்சூழலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஒரு சங்கத்தை என் ஊரில் உருவாக்கினேன். அந்த சங்கம், மூன்று வருடங்களில் நான் எதிர்பார்க்காத அளவுக்கு வளர்ந்து மூன்று கிளைகளோடு சுமார் இரு நூறு அங்கத்தினர்களைக் கொண்டுள்ளது சூ பா ச என்ற சூழல் பாதுகாப்பு சங்கம் .

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்தரங்கள், வனஜீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனிதக் குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதக்குலம், விலங்கினம், பறவையினம், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்தச் சுற்றுச்சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இதைப் பாதிக்கும் விதத்தில் சில தனியார் நிறுவனங்கள் தமது வணிகத்துக்கு மரங்களை தரித்து. கனிவளத்தை திருடியும் தமது ஆதாயத்தை பெருக்குகிறார்கள் என்பதை எதிர்த்து எமது சூ பா ச சங்கம் பிரச்சாரம் செய்தது . அரசியல் தொடர்புள்ள அந்த நிறுவனங்கள் தங்களின் பண பலத்தால் அரசியல்வாதிகளை பாவித்து, சட்டத்தையும் மீறி செயல் படுவதை எதிர்ததினால், என்னை தண்ணீர் இல்லாத ஒரு கிராமத்துக்கு மாற்றம் செய்தனர். அந்த ஊரின் பெயர் பாலைவனபுரம் . அந்த கிராமம் எங்கு இருக்கிறது என்று எவருக்குமே தெரியாது
சோலைவனப் புரமாக ஒரு காலத்தில் இருந்த அந்த கிராமம் எப்படி பாலைவனப்புரமாக மாறியது என்ற சரித்திரம் என் தாவரவியல் பேராசிரியருக்குத் தெரியும். அவர் நான் அந்த ஊருக்கு மாற்றலாகிப் போக முன் என்னை எச்சரித்து அனுப்பினார்.

*****
கல்வி இலாக்காவில் இருந்து எனக்கு வந்திருந்த மாறுதல் கடிதத்தோடு பாலைவனப்புரதுக்கு அருகே உள்ள ராசிபுரம் ரயில் நிலயத்துக்கு ரயிலில் சென்னையில் இருந்து புறப்பட்டேன். ராசிபுரம் சென்னையில் இருந்து 365 கி மீ தூரத்தில் உள்ளது சுமார் ஏழு மணித்தியலாப் பயணம். இரவு பதினோரு மணிக்குப் புறப்பட்டு. காலை ஆறு மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் போய்ச் சேர்ந்தேன். ராசி புரத்தில் சிறுவர்களைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடவும், கொத்தடிமைகளாகவும் விற்பனை செய்த செய்தி ஒன்றைப் பத்திரிகை ஒன்றில் வாசித்தது என் நினைவுக்கு வந்தது. நல்ல வேளை நான் ராசி இல்லாத அந்த ஊரில் வேலைச் செய்யப் போவதில்லை.

பாலைவனப் புரத்தில் ரயில் நிலையம் இல்லை. ராசிபுரத்தில் இருந்து இருபது கி மீ தூரத்தில் பாலைவனப்புரம்இருந்தது பாலைவனப்புரதுக்கு தினமும் ராசிபுரத்தில் இருந்து காலையும் மாலையும் ஒரு பஸ் போய் வந்தது . ராசிபுரத்தில் நான் இறங்கியபோது என்னோடு மூவர் மட்டுமே ரயிலில் இருந்து இறங்கினார்கள். அதில் ஒருவரும் என்னைத் தவிர பாலைவனப்புரம் போகவில்லை ,
எப்படி அந்த ஊருக்குப் போவது என்று வெள்ளை நிற யூனிபோர்ம் அணிந்த ஸ்டேசன் மாஸ்டரைக் கேட்டேன்.

“அங்கு போக பஸ் பத்து மணிக்கு வரும் அதோ தெரிகிறதே மாட்டு வண்டில் அதன் சொந்தக்காரன் அந்த பாலைவனப்புரதை சேர்ந்தவன். அவனைக் கேட்டுப் பாருங்கள். சில நேரம் அவன் தன் வண்டிலில் உங்களைக் கூட்டிப்போவான்” என்றார் ஸ்டேசன் மாஸ்டர்

நான் அந்த வண்டில்காரனை அணுகி பாலைவனப்புரதுக்கு அவனின் வண்டில் போகுமா என்று கேட்டேன்

அவன் முதலில் என்னை மேலும் கீழும் பார்த்து “ ஐயா இது தான் முதல் தடவை பாலைவனப்புரத்துக்கு வருகுறீர்களா”? என்று என்னைக் கேட்டான் :
நான் ஆம் என்று பதில் அளித்து, அங்கு போகவேண்டிய காரணத்தை சொல்லி அவன் வண்டிலில் செல்ல முடியுமா என்று கேட்டேன் அவன் தன்வணடிலில் கூட்டி செல்ல சம்மதித்தால் அவன் கேட்கும் கூலியை தருவதாகச் சொன்னேன். அதன் பின் அவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு என் சூட்கேசை வண்டிலில் ஏற்றினான். எனது பயணத்தை தொடர்ந்தேன்

****
அவ் வண்டில்காரன் தன் பெயர் வெலுப்பிள்ளை என்றான் . தான் பல வருடங்களுக்கு முன் பாலைவனபுரம் சோலைவனபுரமாக இருக்கும் போது விவசாயம் செய்தவனாம் . தனது அனுபவத்தை எனனோடு பகிர்ந்தான்.

“ ஐயா நீங்கள் சென்னையா{?

“ஆம் வேலு எனக்கு உன் கிராமத்தில் உள்ள பாடசலையில் தலைமை ஆசிரியர் பதவிக்கு மாறுதல் கிடைத்து சென்னனையில் இருந்து வருகிறேன்”.

“உங்களுக்கு குடும்பம் இல்லையா “?

“இல்லை. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை”

“நல்லதாய் போச்சு:”என்று சொல்லி சிரித்தான்

“ ஏன் வேலு சிரிக்கிறாய்”

“இல்லை ஐயா, அந்த ஊரில் வாடகைகு வீடு கிடைப்பது கஷ்டம். வெளி ஊர் காரர்களுக்கு வீடு வாடகைகு கொடுக்க தயங்குவர்கள் ஊரில் ஒரே ஒரு கிணறு மட்டுமே இருக்கிறது. முன்பு இருந்த நான்கு கிணறுகளில் நீர் வற்றி போய் விட்டது அதனால் தண்ணீர் பஞ்சம்”.

“உங்கள் ஊரில் ஒரு சிற்றாறு ஒடுவதாக கேள்வி பட்டேனே “

“அது எங்கள் கிராமம் சோலைவனமாக இருந்த போது இருந்தது. அது இப்ப வறண்டு போய் விட்டது .நான் விவசாயம் செய்த காலத்தில் இருந்த ஊர் போல் இல்லை இப்போதைய ஊர் . அந்த காலத்தில் தேக்கம், புளி. பலா, நெல்லி, நாவல் , வெப்ப மரங்கள் அடர்த்தியைக் இருந்தன. ஊரில் இருந் குன்றத்தில் முருகன் கோவில் இருந்தது”.

“அது இப்போ இருக்கிறதா”?

“அது மறைந்து போய் மூன்று வருசமாயிற்று” .

“ ஏன் அந்த கோவிலுக்கு என்ன நடந்தது “?

“அந்த குன்றத்தில் இருந்த கிரனைட் கல்லை பிற ஊரில் இருந்து வந்த நிறுவனம் ஓன்று என் ஊர் சனங்கள் பலரை கொத்தடிமைகளாக வைத்து வெட்டி எடுத்து கற்களை பிற ஊர்களுக்கு வீடு கட்ட ஏற்றுமதி செய்தார்கள்”.

“அதனால் குன்றம் குன்றி விட்டதா”? அந்த தேக்கம் புளியம், பலா, நாவல் நெல்லி வெப்ப மரங்களுக்கு என்ன நடந்தது”?

அவைகளையும் ஒரு வெளி ஊர்காரன் வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்துவிட்டான். இப்போ ஈச்சம் பற்றைகள் மட்டுமே மிச்சம் இருக்கிறது”.

“அப்போ காட்டில் இருந்த வனவிலங்குகளுக்கு என்ன நடந்தது”?

“அதை ஏன் கேட்கிறியள் ஒரு காலத்தில் நரி, முயல் ,கரடி. காட்டு அணில், சிறுத்தை, காட்டுக் சேவல் என்று இருந்தன . அவையெல்லாம் வேறு இடத்துக்கு போய் விட்டன. பாலைவனத்தில் அவைக்கு என்ன வேலை

“பறவைகள் வேறு இடத்தில் இருந்து வருவதில்லையா”?

“வேடம்தாங்கலுக்கு வருவது போன்று பல பறவைகள் ஒரு காலத்தில் வந்து போயிற்று. அவையும் இந்த பாலைவன ஊருக்கு இப்போ வருவதில்லை”.

“ அந்த ஊரில் என்ன இன்னும் மாறவில்லை.”

“கிராமத்து நாட்டுப் பாடல்கள்.. நாட்டுக்கு கூத்து ,கரகாட்டம், கும்மி, புலியாட்டம் இன்னும் மாறவில்லை. அதுவும் சினிமா வந்தபின் ஒருவரும் காசு கொடுத்து பார்ப்பதில்லை .அரை நிர்வாண டப்பாங் கூத்துக்கு இப்ப மவுசு”

“ வேலு, உன் வயலுக்கு என்ன நடந்தது “?

“ அது ஒரு கதை. என் கிராமத்தில் இருந்த ஐந்து எக்கார் வயல் என பூட்டன் சொத்து, எனக்கு முதுசமாக வந்து சேர்ந்தது அதில் விவசாயம் செய்து பிழைத்தேன்.சிற்றாறுக்கு அருகில் அந்த காணி இருப்பதால் விளைச்சல் அதிகம் என்று அறிந்த ஒரு செட்டியார் அதை அதிக பணம் கொடுத்து வாங்கினார்”.

“இப்போ அவர் அதில் விவசாயம் செய்கிறாரா”?

“அது தான இல்லை. சில குடிசைகள் கட்டி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார். அது மட்டுமல்ல சட்டத்துக்கு விரோதமாக ஆற்று மணல் கொள்ளை அரசியல் வாதிகளின் ஆதரவோடு நடக்குது ” வேலு சொல்லி கவலைப் பட்டான்.
“ வேலு இது ஒரு வகை கனிவள பயங்கரவாதம். மணல் ஒரு தண்ணீர் தாங்கி. பூமியில் உள்ள மணல் அடுத்கு வழியே நீர் பூமிக்கு கீழ் போகிறது . நிலத்துக்கு அடியில் நீர் மட்டம் உயர்ந்தாலும் அதில் இடுந்து நீர் எடுக்க செலவு அதிகம் . உங்கள் கிணற்று நீர் வற்ற மணல் திருட்டும் ஒரு காரணம் இதை தடுக்க ஊர் வாசிகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். கிராமத்தில் ஒரு புரட்சி கொண்டு வரவேண்டும். அது நடந்தால் பாலைவனம் திரும்பவும் சோலைவனமாகலாம்”.

பேசிக்கொண்டு வந்ததில் நேரம் போனது தெரியவில்லை.
“ஐயா ஊர் வந்து விட்டது அதற்கு அதோ பதை ஓரத்தில் தெரிகிறதே ஒரு சுமைதாங்கியும், மாடு முதுகு சொரியும் கல்லும் தெரிகிறதே அது தான் என் ஊரின் ஆரம்ப எல்லை.

“சுமைதாங்கியா? அதையாவது விட்டு வைத்து இருக்கிறார்களே”.

“அது ஊர் வாசிகள் செய்த ஒரு நல்ல காரியம் ஐயா உங்களை எந்த இடத்தில இறக்கி விட வேண்டும்::

“அது நல்ல கேள்வி. வேலு இனி தான் நான் இருக்க வீடு தேட வேண்டும். முதலில் கிராம சபை தலைவர் மூக்கன் தேவரை சந்தித்து கடிதத்தை காட்டி உதவி கேட்க இருக்கிறேன்” நான் சொன்னேன் .

”ஐயா நீங்கள் தங்க வீடு பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம் நீங்கள் படித்தவர் . இரண்டு அறைகள் உள்ள என் வீட்டில் நீங்கள் விரும்பினால் தங்கலாம். நானும் என் மனவி மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறோம். என் இரு பெடியன்களும் துபாயில் வேலை. மாதம் எங்களுக்கு காசு அனுப்புவாங்கள். உங்களால் முடித்ததை வாடகையாக தாருங்கள். எங்கள் வீட்டில் ஏதோ என் மனைவி சமைப்பதை நீங்களும் சாப்பிடலாம்” என்றான் வேலு.

எனக்கு அவன் சொன்னது மகிழ்ச்கியைக் கொடுத்தது . நல்ல மனம் உள்ள அந்த மனிதன் வீட்டில் நான் தங்க எனக்கு கிடைத்த உதவிக்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்தேன்.

****
வேலு சில வருடங்களுக்கு முன் அந்த ஊர் கிரம்ம சபை தலைவராக இருந்தவன் அதனால் ஊர் வாசிகள் பலரை அவனுக்குத் தெரியும்
வேலுவோடும் நான் வேலை செய்யப் போகும் பாடசாலையில் ஆசிரியராக இருக்கும் வேலுவின் தம்பி முத்துப்பிள்ளை யோடு நெருங்கிப் பழகினேன் . அந்த பாடசாலையில் நான் உற்பட மொத்தம் ஆறு ஆசிரியர்கள் இருந்தோம் . என்னைத் தவிர ஐந்து பெரும் அந்த ஊர்வசிகள் . அவர்களும் என்னைப் போல் கிராமத்து சூழலில் அக்கறை உள்ளவர்கள் அரசியல் வாதிகளுக்கும் செல்வந்தர்களும் எதிர்க்கச் செயல் பட முடியாதவர்கள்.

நான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதத்தில் வேலுவின் வீட்டில் பாடசாலை ஆசிரியர்களும் மூன்று மாணவர்களும் ஒன்று கூடினோம். பாலைவனக் கிராமத்துக்குப் பக்கத்து ஊரில் உலா குளத்தில் இருந்து தண்ணீர் குழாய் மூன்று மைல்களுக்கு கொண்டு வர முடிவு எடுத்தோம் அதனால் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவுக்கு போக்கலாம் . அதைப் பற்றி முதலில் அம்மாவட்ட செயலாளரைச் சந்திது பேசி அவரின் சம்மதம் பெற்றோம் ஊரில் உள்ள மாணவர்கள் ஒன்று இணைந்து செயல் பட வேண்டும் அதன் பின் ஆற்றின் கரையில் நடக்கும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும். கவனிப்பார் அற்று கிடந்த வயல்களில் விவசாயம் செய்ய வேண்டும். குன்றத்தில் கல் வெட்டி எடுப்பதைத் தடுக்க வேண்டும்.,

பலைவனப்புரத்தில் இருப்பது மூன்று பல சரக்கு கடைகள், ஒரு சைக்கிள் கடை இரு தேநீர்க் கடைகள் . மற்றும் இரு துணிக் கடைகள் . அவர்களும் எங்களோடு ஒத்துழைக்கச் சம்மதித்தனர் .
சென்னையில் உள்ள சூ.பா.ச செயற் குழுவோடு தொடர்பு கொண்டு அவர்கள் உதவியையும் பெற்றோம்’ சூழல் பயங்கரவாதத்தை எதிர்த்து போரை ஆரம்பித்து வைத்தேன். நான் அந்த கிராமத்துக்கு வந்து மூன்று வருடத்தில் எங்குப் பார்த்தாலும் பல வித மரங்கள். ஓவ்வொரு வீட்டிலும் சிறு தோட்டங்கள் . படிப்படியாகப் பாலைவனப் புரம் பழைய நிலைக்கு வந்தது . பல மாதங்கள் மழை இல்லாது இருந்த அக்கிராமத்தில் மழை தவறாது பெய்யத் தொடங்கியது . வளர்ந்த மரங்களின் மகிமை ஊர் மக்களுக்கு புரிந்தது தினமும் ராசிபுரத்தில் இருந்து நான்கு பஸ்கள் வந்து போயிற்று
ஆறு வருடங்களில் அந்த கிராமத்தில் பெரும் மாற்றம்.
என் சேவையை அறிந்த அரசு எனக்கு திரும்பவும் சென்னைக்கு சுற்று சூழல் இலாக்காவில் ஒரு அதிகாரியாக மாற்றியது. அதே நேரம் என் பெற்றோர் எனக்கு திருமணம் பேசி முடிவு செய்திருந்தார்கள்
நான் சென்னை திரும்பும் போது. வேலுவின் வண்டிலில் ராசிபுரம் ரயில்வே ஸ்டேசனுக்குசென்றேன். பல பாலைவனபுர வாசிகள் என்னை வழி அனுப்ப வந்திருந்தனர். நான் வந்த பல வருடங்களுக்கு முன் அந்த ஸ்டேசனில் வந்து இறங்கிய போது ராசிபுரத்தில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் இன்னும் அங்கேயே வேலையில் இருந்தார். அவரும் எனக்கு கை குலுக்கி சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்

****
(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (3-May-19, 3:59 pm)
பார்வை : 168

மேலே