ஆதங்

வாடா கண்ணன், புதுதில்லில இருந்து எப்ப வந்த?
@@@@
நேத்துத்தான்டா. மனைவிக்கு ரண்டு நாளைக்கு முன்னாடி சுகப்பிரசவம். அழகான பெண் குழந்தை. மருத்துவமனையிலிருந்து நேரா உன்னைப் பாக்க வந்தேன். பாட்டி எங்க?
@@@@
வீட்டுக்குப் பின்புறம் கிணத்தடில இருக்கறாங்க.
@@@@
சரி இந்தா, இந்த இனிப்புப் பொட்டலத்தைப் பிடி. சரி, நான் வந்திருக்கிறதை பாட்டிகிட்ட சொல்லு.
(முத்து பாட்டியைக் கூப்பிடப் போகிறான். இரண்டு நிமிடத்தில் பாட்டி கைகளை முந்தானையில் துடைத்துக்கொண்டே வருகிறார். )
@@@@@
வாடா கண்ணா. நல்ல இருக்கறயா? உன் மனைவிக்கு கொழந்தை பொறந்திருச்சா?
@@@@@
அழகான பெண் குழந்தை பாட்டி. குழந்தைக்குப் பேரு வைக்கணும். நீங்க தான் நல்ல வேறமொழிப் பேராச் சொல்லணும்.
@@@@@
சொன்னாப் போச்சு. எம் பேரந்தான் எனக்கு 'பெயர் ஞானி'ன்னு பட்டம் குடுத்துட்டானே.
@@@@
சரிங்க 'பெயர் ஞானி' பாட்டிம்மா, எஞ் செல்லக் குழந்தைக்கு நல்ல பேராச் சொல்லுங்க.
@@@@
'ஆதங்'குன்னு வைடா கண்ணா.
@@@@#
அய்யய்யோ, ஆதந்கவாதின்னா தீவிரவாதி.
@@@@@
அது எனக்குத் தெரியும்டா. நாஞ் சொல்றது 'ஆதங்'குடா.
@@@@#
சரிங்க பாட்டிம்மா. செல்பேசில இண்டியசைல்ட்நேம்ஸ்.காம்ல போட்டு அந்தப் பேரு இருக்குதான்னு பாக்கறேன். (தேடிப் பார்த்தபின்பு) பாட்டிம்மா, நீங்க உண்மையிலேயே 'பெயர் ஞானி'ப் பட்டத்துக்குப் பொருத்தமானவங்கதான்.
@@@@
என்னடா அர்த்தம் கண்டுபிடிச்ச, கண்ணா?
@@@@
'ஆதங்'ன்னா 'நல்ல தேவதை'ன்னு அர்த்தம்.
@@@@
நாஞ் சொன்னா அது சரியா இருக்கும்டா கண்ணா.
@@@@
ரொம்ப நன்றிங்க பாட்டிம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Athang = Good Angel.
Greek, Latin origin.

எழுதியவர் : மலர் (2-May-19, 3:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 106

மேலே