கவிமகள் அறிவாளோ என் தவிப்பு
கவிமகள் உணர்வாளோ என் தவிப்பு.....
கார்மேகம் காணுகையில் கபால உச்சில் ஓர்கர்வம்- அது
என்னவள் கூந்தலில் காற்றின் ஆலிங்கனம்
மலரின் மணம் நுகர்வில் மனம் கொள்ளும் மந்தகாசம் - அது
என்னவள் மேனியில் இயற்கை களவாடிய வாசம்
பிறைமதியை நோக்கின் இதயத்தில் இறுமாப்பு - அது
என்னவள் கடித்துமிழ்ந்த நகங்களில் ஒரு பதிப்பு
குழலிசை செவி நுழையின் நெஞ்சத்தில் சிலிர்ப்பு - அது
என்னவள் மென்சிரிப்பில் இசை கொண்ட லயிப்பு
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலே அவள் அகத்தின் அகப்பு - அதை
ஆய்ந்திடத் துடிக்குமென் ஆசைக்கில்லை அளப்பு
கவிமகள் கனிந்து உணர்வாளோ என் தவிப்பு - அதில்
காதல் மடைதிறந்தால் அடைவேன் களிப்பு...!
கவிதாயினி அமுதா பொற்கொடி