எங்கே மனிதன்

கல்லா கட்ட ஏது சாதி?
யார் கொடுத்தாலும் பணத்தை
வாங்கிப் போட்டுக்கும்

எழைகள் மீதுதான் சட்டம் பாயும்
பணக்காரன் பக்கம்தான் நீதி சாயும்

தவறை எந்த சாமி தட்டி கேட்கும்?
திருடனிடம் பங்கு வாங்கிக்கும்
நல்லவனை மூடனாக்கும்
முதலாளிக்குதான் கூசா தூக்கும்
சாமி பேரைச் சொல்லித்தான்
காவிகள் ஊரை ஏமாத்தும்...
திருடனுக்கு நண்பன் இங்கு
காவல்காரன்தான்
கேடுகெட்ட தலைவனுக்கு தேவை
அடிமை கூட்டம்தான்
நாட்டில் நல்லவன் குறைந்து போய்ட்டான்
காரணம் என்ன சுயநலம்தான்
மக்களை மூடனாய் ஆக்குவது
சாதியும் மதமும்தான்...
அது மட்டும் இல்லையென்றால்
எல்லோரும் மனிதன்தான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-May-19, 10:29 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : engae manithan
பார்வை : 199

மேலே